பக்கம் எண் :

94ஆத்மாநாம் படைப்புகள்

வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு

(இரண்டாம் பதிப்பு)*

வகுப்புக்கு வந்த எலும்புக்கூடுகள்
இன்று
படித்துப் பட்டம் பெற்று
டாக்டர் பட்டமும் பெற்று
ஆட்சி புரியத் துவங்கின
வேலை செய்யும்
எல்லா எலும்புக்கூடுகளும்
கலகலத்து
மினுமினுக்கி
சிலுசிலுக்கி
சந்தோஷமாய் இருப்பதாய்
பாவனை செய்தன
புதிதாய்ப் பிறந்த எலும்புக்கூடுகள்
வகுப்புகளுக்கு
டிபன் பாக்ஸ் எடுத்துச் செல்வது
தவிர்ந்துவிட்டது
வாத்தியார் எலும்புக்கூடுகள்
புதிய புதிய
புத்திசாலியான
ஓட்டுப் போடக்கூடிய
எலும்புக்கூடுகளை
உருவாக்கி மகிழ்ந்தன
பெரும்பாலும்
ரத்தம் சுண்டிய
கரப்பான்களும்
ஒட்டுப் பூச்சிகளும்
ஏலக்காய்ச் செடிகளைக்
கெட்டியாய்ப் பற்றிக்கொண்ட