வாழ்வதற்கான நற்செயல்களிலே ஈடுபட்டு வாழ்ந்தவர்களைத் தமிழர்கள் அந்தணர்கள் என்று அழைத்தனர். ‘‘கேள்வி அந்தணர் கடவும் வேள்வி ஆவியின் உயிர்க்கும் என்நெஞ்சு. (பா. 36) வேத நூற் கேள்விகளையுடைய அந்தணர்கள் செய்யும் வேள்வியிலிருந்து, எழும்பும் புகையைப் போல, என் நெஞ்சத்திலிருந்து பெருமூச்சு எழுந்துவரும்’’. ‘‘அந்தி அந்தணர் எதிர்கொள. (பா. 199) அந்தணர்கள் தாம் செய்யும் தொழில்களைச் செய்து அந்திக்காலத்தை எதிர்கொள்ள’’. ‘‘முக்கோல் கொள் அந்தணர் முதுமொழி நினைவார். (பா. 126) முக்கோலைக் கொண்ட அந்தணர்கள், மாலைக் காலத்திலே முதுமொழியான மந்திரத்தை நினைத்துக் கொண்டு அமர்ந்திருப்பர்’’. இவைகளால் தமிழ் நாட்டிலே வாழ்ந்த அந்தணர்கள் வேதம் படித்தனர்; வேள்விகள் புரிந்தனர்; என்பதை அறியலாம். ‘‘காதல்கொள் வதுவைநாள், கலிங்கத்துள் ஒடுங்கிய மாதர்கொள் மானோக்கின் மடந்தை தன் துணையாக, ஒதுடை அந்தணன் எரிவலம் செய்வான்போல். (பா. 69) காதல் கொள்கின்ற திருமண நாளிலே, ஆடையால் முகத்தை மறைத்துக்கொண்டிருக்கின்ற-அழகுடைய-மான் போன்ற பார்வையை யுடைய பெண்ணைத் தன் துணையாகக் கொண்ட-வேதமோதிய அந்தணன் அவளுடன் தீயை வலஞ்செய்வான்’’. இதனால் அந்தணர்கள் அக்கினி சாட்சியாக மணம் புரிந்துகொண்டனர் என்பதைக் காணலாம். அந்தணப் |