136 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
பெண்கள், திருமணக் காலத்தில், ஆடையினால் முகத்தை மூடியிருப்பர் என்பதையும் அறியலாம். இது அந்தணர் திருமண முறையைக் குறிக்கும். இராமாயண - பாரதம் சங்ககாலத்திலே இராமாயண - பாரத வரலாறுகள் தமிழ் நாட்டிலே பரவியிருந்தன; அவ் வரலாறுகளில் உள்ள பல நிகழ்ச்சிகளையும் தமிழ் மக்கள் அறிந்திருந்தனர். இவ்வுண்மை சங்க நூல்கள் பலவற்றில் காணப்படுவது போலவே கலித்தொகையிலும் காணப்படுகின்றது. ‘‘இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக, ஐயிருதலையின் அரக்கர் கோமான், தொடிப்பொலி தடக்கையின கீழ்புகுந்து, அம்மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல. (பா. 38) இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன் உமையாளுடன் கயிலையிலே வீற்றிருந்தான். அப்பொழுது பத்துத் தலைகளையுடைய அரக்கர் தலைவனாகிய இராவணன், காப்புப் பொலியும் தன் வலிமையான கைகளை மலையின் கீழே புகுத்தி அதை எடுக்க முயன்றான். அவனால் அம்மலையைப் பெயர்த்தெடுக்க முடியவில்லை. மலையின் கீழ் அகப்பட்டுக் கொண்டு வருந்தினான்’’. இப்பாடற் பகுதி இராமாயணக் கதையைக் குறிப்பிடுகின்றது. ‘‘வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள், முதியவன் புணர்ப்பினால் ஐவர் என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா, கைபுனை அரக்கில்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு (பா. 25) விளக்கமுற்ற நாடு என்பதற்குச் சரியான வடமொழிப் பெயர் கொண்ட முகத்தையுடையவன்: (திருதராஷ்டிரன்) |