| 154 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
கண்ணனாகவும், பலராமனாகவும் பிறந்தார். இச்செய்திகளும் இந்த இருபத்து மூன்றாவது பாடலில் காணப்படுகின்றன. இருந்தையூரின் தோற்றம், திருமாலின் பெருமை இரண்டையும் இப்பாடலில் காணலாம். இப்பாடல் டாக்டர் உ. வே. சா. அவர்கள் பதிப்பில் பின் சேர்க்கையில் முதலாவது பாடலாக உள்ளது. திருப்பரங்குன்றம் சங்ககாலத்திலே இப்பொழுதுள்ள திருப்பரங்குன்றம் தண்பரங்குன்றாகக் காட்சியளித்தது. குன்றின்மேல் குளிர்ச்சி தரும் மரங்கள் இருந்தன; இனிய அருவி நீர் இடையறாமல் ஓடிக் கொண்டிருந்தது; தண்ணீர்ச் சுனையிருந்தது; அதிலே ஆடவரும் பெண்டிரும் நீர் விளையாடினர். முருகன் முருகனைப்பற்றிய பாடல்கள் செவ்வேள் என்ற தலைப்பில் உள்ளன. 5. 8. 9. 14. 17. 18. 19. 21. ஆகிய எட்டுப் பாடல்கள் முருகனைப்பற்றியவை. இவற்றுள் ஐந்தாவது பாடல் மட்டும், பொதுப்பாட்டு. எந்த இடத்தையும் குறிக்காமல் பொதுவாக முருகனுடைய புகழைப் பாடுகின்றது. ஏனைய ஏழு பாடல்களும் திருப்பரங்குன்றத்தைப் பாடியவை. ஐந்தாவது பாட்டிலே முருகனுடைய பிறப்பு கூறப்படுகிறது. அது கந்தபுராண வரலாற்றிலிருந்து சிறிது மாறுபட்டுள்ளது. தண்பரங்குன்றிலே முருகனை வழிபடுவதற்காக எப்பொழுதும் ஆண்களும் பெண்களும் குழுமியிருக்கின்றனர் செவ்வேளைப் பலர் சேவித்துக்கொண்டேயிருக்கின்றனர்; இவற்றைப் பரிபாடலின் 21வது பாடலிலே விரிவாகக் காணலாம் |