4 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
பெருந்தேவனாரால் பாடப்பட்டது. கடவுள் வாழ்த்தில்லாமல் நானூறு பாடல்கள் இருந்திருக்கவேண்டும். மூன்று பாடல்கள் கிடைக்கவில்லை. இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றுண்டு. சிறந்த உரை. அவ்வுரை நூல் முழுவதற்கும் கிடைக்கவில்லை. முதல் இருநூற்று அறுபத்தாறு பாடல்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கின்றது. இந்நூலுக்கு இந்நாளில் ஒளவை துரைசாமிப் பிள்ளை எழுதிய உரை ஒன்றுண்டு. இந்த எட்டு நூல்களைப்பற்றிய வரலாறுகள்; அவற்றின் ஆசிரியர்கள்; அந் நூல்களைத் தொகுத்தோர்; தொகுப்பித்தோர் ஆகியவைகள் ஒவ்வொரு நூலின் முதலிலும் குறிப்பிடப்பட்டுள்ளன; அவற்றை விரிவாக அங்கே காணலாம். செய்யுளமைப்பு இந்த எட்டுத் தொகை நூல்களிலே நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய ஆறு நூல்களும் ஆசிரியப் பாக்களால் அமைந்தவை. சங்க நூல்களிலே பெரும்பாலானவை ஆசிரியப் பாக்களால் அமைந்தவை என்பதற்கு இவைகளே போதும். பண்டைத் தமிழ் நூல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாக்களால் இயற்றப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றிப் ‘‘பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்’’ என்னும் நூலின் விளக்கத்திலே எழுதப்பட்டுள்ளது. பரிபாடல் என்பது ஒருவகைப் பாட்டு. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா ஆகிய நால்வகைப் பாடல்களின் உறுப்புக்களும் கலந்து வருவது. இத்தகைய பாடல்களின் தொகுப்பே பரிபாடல். இது இசையுடன் பாடக் கூடியது. கலிப்பா என்பது நால்வகைப் பாடல்களில் ஒன்று. இதையும் பல இசைகளில் பாடலாம். ஒரு செய்தியைத் தொகுத்தும். விரித்தும், சுருக்கியும் கூறுவதற்கேற்ற பகுதி |