பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்49

மகப்பேறு

இல்லறத்தில் வாழ்வோர்க்குப் புத்திரப்பேறு ஒரு சிறந்த செல்வமாகக் கருதப்பட்டது. கணவனுக்கும் மனைவிக்கும் எவ்வளவு கடுமையான சச்சரவு நேர்ந்தாலும் குழந்தை களிருந்தால் அச் சச்சரவு தலைதூக்காது. அவ்விருவர்க்கும் குழந்தைகளே சமாதானத் தூதர்களாய் நிற்கும். அவர்களுடைய பிணக்கு விரைவில் மறையும். இக் கருத்தமைந்த பாடல் ஒன்று காணப்படுகின்றது.

வெளியே சென்றிருக்கும் கணவன்மேல் மனைவி கடுங்கோபத்துடன் இருக்கின்றாள். கணவனும் இதைத் தெரிந்து கொண்டான். அவன் வீட்டுக்கு வரும்போது ஒரு தந்திரம் செய்தான். ‘‘நாம் நேரே அவளிடம் போனால் அவள் நம்முடன் பேசமாட்டாள்’’ என்று நினைத்தே அவன் அத் தந்திரத்தைக் கையாண்டான்.

பேசாமல் வீட்டுக்குள் புகுந்தான் அவன். கட்டிலிலே உறங்கும் புதல்வனை அணைத்துக் கொண்டு படுத்து விட்டான். அதைக்கண்ட மனைவி, தானும் கட்டிலில் ஏறித் தன் கணவனுடைய முதுகுப் புறத்தை அணைத்துக்கொண்டு படுத்துவிட்டாள். இவ்வளவோடு அவர்கள் பிணக்கு தீர்ந்துவிட்டது.

‘‘காண்பாய் பாணனே; தலைவன் செய்த காரியம் தகுதியுடையதுதான். மாலைக்காலம்: நல்ல நிலவு வீசுகின்றது. குள்ளமான கால்களையுடைய கட்டில். அதன்மேல் தூய்மையான மெல்லிய படுக்கை. அப்படுக்கையில் புதல்வன் படுத்திருக்கின்றான். வெற்றியையுடைய தலைவன் மெதுவாக நடந்துவந்தான். அந்தப்படுக்கையிலே ஏறினான். படுத்துக்கொண்டிருக்கும் யானையைப்போல மூச்சுவிட்டுக்கொண்டு, புதல்வனைத் தழுவிக் கொண்டு படுத்தான். புதல்வனுடைய