பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்69

வாழும் திண்மை - மனோவலிமை - மன உறுதி - பெண்களுக்கு வேண்டும். மானமே மாதர்க்கு அணிகலம். தங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதோடு தங்கள் காதலரையும் பிறர் பழிக்காதவாறு நடந்து கொள்ள வேண்டும். இதுவே சிறந்த குணம்-நிறை-ஆகும். தமிழ்ப் பெண்கள் இத்தகைய திண்மையும், நிறையும் பொருந்திய கற்புடையவர்களாக இருந்தனர். இவ்வுண்மையை விளக்கும் பாடல்கள் நற்றிணையிலே பல உண்டு.

கணவன் பிரிவினால் உள்ளத்திலே கவலை தோன்றுவது இயற்கை; அக் கவலையை வெளியிலே காட்டாமல் மறைத்துக் கொள்ளுவதே கற்பின் மாண்பாகும். கணவன் எப்பொழுது வருவானோ என்ற கவலை படிந்த முகத்துடன் கன்னத்திலே கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருத்தல் கற்புடைய மங்கைக்கு அழகன்று. அப்படியிருந்தால் அவள் கணவனைப் பற்றித்தான் ஊரார் பழித்துரைப்பார்கள்.

‘‘இப் பெண்ணை இப்படித் தனித்திருந்து தவிக்கும்படி விட்டுப்பிரிந்து போகலாமா அவன்? இரக்கமுள்ளவனாயிருந்தால் இப்படிப் போவானா? இவளை விட அவன் தேடிப் போயிருக்கும் செல்வம் அவ்வளவு உயர்ந்ததா?” என்று பார்ப்போர் பழித்துப் பேசுவார்கள். ஆதலால் கணவனுக்கு இத்தகைய பழிப்பு உண்டாகாமல் பாதுகாத்துக் கொள்ளுகின்றவளே சிறந்த கற்புடையவள். இக் கருத்தை ஒரு செய்யுளிலே காணலாம்.

‘‘கணவனைப் பிரிந்து ஒரு தனியிடத்திலேயிருந்து வருந்தினாலும் சாரி, தனது அருமையான உயிரே போவதாயினும் சரி, சிறந்த ஆபரணங்களை யணிந்த கற்புடைய மகள் தன் துன்பத்தை மறைத்துக் கொள்ளவேண்டும். (மறைத்துக் கொள்ளாவிட்டால்) குளிர்ந்த