68 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
இக் குறளிலும் நாகரிகம் என்ற சொல் கண்ணோட்டம் என்ற பொருளில் வந்திருப்பதைக் காணலாம். மேலே கண்ட நற்றிணைப் பாடலைப் பின்பற்றியதே இக்குறள். பெண்ணின் பெருமை மானமுள்ள குலத்திலே பிறந்த பெண்கள், தம் வீட்டுக் குறைகளைப் பிறர் அறிவதற்கு இடங் கொடுக்கமாட்டார்கள். வறுமையால் எவ்வளவுதான வாடி வதங்கினாலும் பெருமையை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியடைவார்களேயன்றி இரவற் சோற்றுக்கு ஏங்கி நிற்கமாட்டார்கள் அவர்கள் குடும்பம் வறுமையடைந்ததைக் கண்டு, அவர்களுடைய தந்தையர் அன்புடன் உணவுப் பொருள்களை அனுப்பி வைத்தால் அவைகளைக் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது சிறந்த அறிவும் ஒழுக்கமும் நிறைந்த குடித்தனப் பெண்களின் குணமாகும். ‘‘சிறந்த அறிவையும், அறநெறியையும் எங்கே கற்றுக்கொண்டாளோ! அவளைக் கொண்ட கணவனுடைய குடும்பம் வறுமையடைந்துவிட்டது என்பதை அறிந்து, அக்குடும்பத்திற்கு அவள் தந்தை அனுப்பி வைத்த உணவுப் பொருளைக் கூடப் பெரிதாகக் கருதமாட்டாள். அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்? கொண்டகொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள். ’’ (பா. 11) கற்பின் சிறப்பு திண்மை, நிறை என்ற சொற்கள் கற்பைக் குறிப்பன. திண்மை - மனோவலிமை. நிறை-நிறைந்த குணங்கள். காதலனுடன் இன்ப துன்பங்களிலே ஒன்றுபட்டுக் கலந்து |