72 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
நாகரிகமுள்ள நெய்தல் நிலத்துப் பெண் ஒருத்தியைக் காதலிக்கின்றான். அவனுடைய காதலுக்கு நெய்தல் நில மங்கையின் தோழி தடை போடுகின்றாள். ‘‘பணக்காரன் மகனாகிய நீ, ஏழை மகளாகிய என் தலைவியைக் காதலிப்பது பொருந்தாது. என் தலைவிக்கு ஏற்ற கணவன் எங்கள் குலத்திலேயே கிடைப்பான். ஆகையால் நீ அவளிடம் அணுகாதே’’ என்று தடுக்கின்றாள். இக் கருத்துடன் காணப்படுகின்றது ஒருபாட்டு. ‘‘இவள் கடற்கரையிலே உள்ள அழகிய சிற்றூரிலே, சிறு குடியிலே பிறந்தவள்; நீல நிறம் பொருந்திய பெரிய கடல் கலங்கும்படி கடற்குள்ளே புகுந்து மீன்பிடித்து வாழும் பரதவர் குலத்துப் பெண். நீயோ நீண்ட கொடிகள் பறந்து கொண்டிருக்கின்ற - பாதுகாப்பமைந்த - பழமையான நகரத்திலே - விரைந்து தேரேறிச் செல்லும் செல்வர் குடியிலே பிறந்தவன்; உன் பெற்றோர்க்கு நீ ஒரே காதற்புதல்வன். ‘‘கொழுப்புள்ள சுறாமீன் துண்டுகளைக் காய வைத்துவிட்டு-அவைகளைத் தின்ன வரும் பறவைகளை ஒட்டிக் கொண்டிருக்கும் எங்களுக்கு உன்னால் என்ன நன்மை கிடைக்கப் போகிறது? எங்களிடம் புலால் நாற்றம் வீசுகிறது. எம்மிடம் நெருங்காதே; எட்டி நில்! கடல் நீரால் விளையும் உப்பு, மீன் முதலிய எமது சிறிய செல்வமுடைய நல்ல வாழ்க்கைக்கும் பெரிய செல்வமுடைய உனது வாழ்க்கைக்கும் பொருந்துமோ? பொருந்தாது. எமது குலத்திலேயே எமது தலைவிக்கேற்ற உயர்ந்த வாலிபன் உண்டு. ஆகையால் நீர் போகலாம். இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீனிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீன்எறி பரதவர் மகளே, நீயே, நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் |