பக்கம் எண் :

திரு அவதாரம்153

 

555.       மரித்தவ ரிடம்நின் றெழும்புநாள் வரைக்கும் எனஅவ ருரைத்தனர் நமக்கே
              மரித்தவ ரிடம்நின் றெழும்புத லெனவோ வசனமா மிதன்பொருள் எனவோ
              அறிந்துகொள் வதற்கே யவர்களே தமக்குள் ஒருவரை யொருவரே வினவ
              அறியமு டியாதே தமக்குளே யடக்கி யவரிடம் வினவின ரிதையே.

556.       தப்புரை யிதுவோ சுருதிபா ரகரே சாற்றுவ தாமிது வசனம்
              எப்படி யெனினும் எலியா முனியே முன்வர வேண்டுமே யெனவே
              அப்படி யதுவே யவர்சொலு வதேபோல் அம்முனி முன்னதாய் வருவான்
              தப்புக ளனைத்துஞ் சரிப்படுத் தியுமே சீர்ப்படுத் துவனே நிசமே.

557.       பங்கமே யடைவார் பாடனு பவிப்பார் அவமதிப் படைகுவ ரெனவும்
              மங்கா வசனம் மானுட மகன்மேல் வரைந்திருப் பதற்கெனச் சொலுவீர்
              உங்களுக் கிதுநாள் யானுரைப் பதுவோ எலியா வுதித்தனன் நிசமே
              அங்கவா மனம்போற் செய்தன ரவற்கே யவருமே அறியா தவனை.

558.       குருபரன் தமக்கே யுரைத்தவிவ் வசனம் அருளனைக் குறித்ததென் றறிந்தார்
              பரன்குரு வினுக்கே நிகழ்ந்ததுந் தமக்கே பகர்ந்தது மாமிவை யனைத்தும்
              நரரெவர் களுக்கும் நவிலார் தமது மனத்தினில் மறைத்துவைத் தனரே
              மறுதினம் விடிய அடைந்தனர் மலையி னடியினில் மறுசிசி யரிடமே.

73. சந்திரரோகி. மத். 17 : 14 - 21; மாற். 9 : 14 - 29; லூக். 9 : 37 - 43.

559.       திரள்மிகு சனங்கள் சூழ்ந்துசி டரையே செறிந்துநிற் கிறதுண் டனரே
              திரமுளர் சுருதிப் பாரகர் சிசிய ரொடுதர்க் கமேசெய அறிந்தார்
              பரன்குரு வரமே பார்த்தனை வருமே எதிர்கொளப் பரிவொடோ டினரே
              பரன்மனு மகனை யேற்றுமே யவர்க்குப் பரிவொடு வந்தனஞ் செயவே.