560. இவர்களோ டுமக்கே விவாதமேயெனவோ தருக்கமு மெதைப்பற் றியதோ அவரிது விதமே வினவ பாரகரை யதற்கவர் பதிற்சொலு முனமே அவர்முனாற் பணிந்தே முடக்கினன் முழந்தாள் துன்புறு தனது மகனுக் கவரருள் புரிந்தே யலைசடிப் படுந்தன் மகனுக் கருள்செய விரந்தான். 561. அருமைப் புதல்வன் அவனொரே மகனே சந்த்ரரோ கியேயம் மனனே அருட்குரு பரனே ஆண்டவா அவனை ஆவியொன் றலைக்கழிக் கிறதே ஒருபொழு தெனினும் பேசவே முடியா ஊமை யனாயிருக் கின்றான் நெறுநெறு வெனவே பற்களைக் கடித்தே நெருக்குகின் றதேநுரை தள்ளவே. 562. அலறவைத் தவனை நொம்பலப் படுத்தி யவனிமேற் புரளவைக் கிறதே சிலபொழு தவனே சோர்ந்துமே தரைமேற் கிடப்பனே செத்தவன் நிகர பலதரம் நெருப்பிற் றள்ளியு மவனைப் பழிசெய சலத்தினில் விழுத்தும் நலம்பெற வுமையே நாடியே யடைந்தேன் அருட்சுக மளிக்கம கனுக்கே. 563. உம்மையே தேடக் காணா துமது சிசியரை விரும்பினேன் துரத்த நன்மையா யிளைஞன் நற்சுக மடைய அவர்களால் முடியவே யிலையே நன்மையார் பரனே நன்மை புரியத் தமதிடம் வலமை பெற்றவர் நன்மையே புரிய நற்பெல னிலராய் நலிந்ததை யறிந்துமே வருந்தி. 564. இதுவரை யெனதேர் டிருந்துமே மேன்மை விசுவசமே மற்றசந் ததியே எதுவரை யினுமே யானும தொடுமே பொறுமையா யிருப்பே னியம்பும் எதுவரை யினுமே யானும தொடுமே யிருப்பே னெனநினைக் கிறீர்நீர் அதுசரி யவனை யெனதிட மிவணே கொணருவீ ரெனவறைந் தனரே. 565. அவரிடம் மிகுந்த ஆத்திர மொடுமே யிளைஞனை யவணுளோர் கொணர்ந்தார் அவரிடம் வரவே ஆவியு முடனே யவனைமி கவுமலைக் கழிக்க அவன்தரை விழுந்தே தள்ளியே நுரையே யவன்படு மவதியோ கொடிதே அவன்படு மவதி யாவுமே தெரிந்தே யவனது தகப்பனை விளித்தே. |