பக்கம் எண் :

திரு அவதாரம்155

 

566.       இவனுக் கிதுள்ள காலமெவ் வளவோ உரைப்பா யெனஅவர் வினவ
              இவனுக் கிதுண்டே சிறுவய திருந்தே யிவன்படு மவதியே கொடிதே
              இவனையே கொலவே நெருப்புநீ ரிலுமே யிவனைவீழ்த் தினதிது பலகால்
              இவனுக் கெதும்நீர் புரியவே லுமெனில் எமக்கிரங் குவிரே யருளாய்

567.       விசுவச முனக்கே யுள்ளதோ இதனைச் செயவெனால் முடியுமோ எனவே
              விசுவசிக் கிறேன்யான் ஆண்டவா எனக்கே விரைந்துத வியெனவிசு வசமே
              அசுப்பினி லகல ஆண்டவா அருள்வீர் எனவிறைஞ் சினன்பரி வொடுமே
              விசுவசம் வளரப் பார்த்தஅன் பருமே விரைந்தன ருதவியே புரிய.

568.       இங்கிதை யறிந்த மற்றுள சனங்கள் ஏகமா யோடிவந் தனரே
              அங்கவர் வரவை யாண்டவ ரறிந்தே யாவியை யதட்டினர் உடனே
              இங்கிருந் தகல்வாய் நீங்கியே யிவனை யூமைசெ விடுமா வியேநீ
              எங்குமே யினிமேற் செல்லா யிவனுள் சொல்கிறே னுனக்கென் றுரைத்தார்.

569.       அவனையே மிகவு மலைக்கழித் ததுவே யலறியே விடுத்ததே யவனை
              அவனவண் கிடந்தான் மரித்தவன் நிகர அவன்மரித் தனன்எனப் பலபேர்
              அவன்கரம் பிடித்தே யருட்பர னவனை யெழுப்பவே யெழுந்தன னுடனே
              அவன்பிதா விடமே யவனையொப் புவித்தார் அனைவரு மதிசயித் தனரே.

570.       அவரருட் கிரியை அமலனின் மகத்வம் யாயுங் கண்டவ ரெவரும்
              அவரைக் குறித்தே யதிசய மடைந்தார் யாவுமே பேசியே யகன்றார்
              அவர்தஞ் சிசியர் பதினிரு வரொடும் அகன்றனர் தமதிருப் பிடமே
              அவருட சிசியர் அவரிடந் தனித்தே வந்துவி னாவின ரவரை.

571.       எங்களாற் றுரத்த அசுத்தா வியிதை முடியாக் காரணம் வினவிட
              உங்களாற் றுரத்த முடியா மைஏன் உமதுட அவிசுவா சமேதான்
              உங்களி னிடமே உலகினிற் சிறிதாங் கடுகள வாம்விசு வசமே
              தங்கியுள் ளதெனிற் றவரா தெதையும் முடிக்கவே வல்லரா குவீரே.