இரண்டாம் பகுதி உத்தியோக காண்டம். 4. எருசலேம் யூதேயா ஊழிய பர்வம். 77. எருசலேம் கூடாரப் பண்டிகை, இயேசுவின் சகோதரர், பொதுமக்களின் எண்ணலைகள். யே.ா. 7 : 1 - 15. 1. திருக்குருதம் மூழியத்தை யிதுவிதமே கலிலியினிற் செய்துவர இருவருநூ றாண்டுகள்முன் அடிமைகளா மிசரலேரெ கிப்தினின்றும் திருப்பரனின் மாட்சியினாற் சிறையகன்றே தமதுரிமைப் பூமிசெல்ல குறுக்கிடும்வ னங்களிலே துணிக்குடிசை களில்வசித்த நேர்மையே. 2. வருடவாரி நினைந்தனை மனமகிழ்ச்சிப் பண்டிகையா யனுசரிக்க திருப்பரனே தேர்ந்தொரு திருப்பதியில் இசரவேலர் சேர்ந்துவந்தே திகுவிளாவை யனுசரிக்கத் திருப்பரனு ரைத்ததேபோற் சீர்மிகவே எருசலேமிற் சப்தமாசத் திடைத்தினமே யூதரெல்லாம் ஏகமாயே. 3. தெருக்களிலே வீடுகள்மேல் அகமுனாலுந் திருப்பிரகா ரம்மெவணும் தருக்கிளைகள் தாலமடல் அலறிமிலார் பசுங்கிளைக ளாலமைந்த சிறுகுடிசை களிலேழு தினம்வசித்தே திருப்பரனின் சந்நிதியில் திருவிழாக்கூ டாரவிழா வைச்சிறப்பா யனுசரிக்கும் நாணெருங்க. 4. தருணமிதே யுசிதமாகுந் தாமதியா திவ்விடம்நின் றேகுவீரே அருமையாமுங் கிரியைகளை யங்குளரா முஞ்சிசியர் பார்த்தறிய திருப்பதியுள் யூதநாடே செல்லுவீர்ப்ர பல்லியமா யேயிருக்க விரும்புவனா மெவனுமேதான் செய்வதில்மெய் யந்தரங்கத் தேதெனினும் 5. இப்படியே யிவ்விருண்ட மூலையினி லிவைகளைநீர் செய்குவீரேல் எப்படியும் பேர்தொனிக்கும் ஆதலினா லிவ்விடமோ ஏற்றதல்ல இப்படியாங் கிரியைகளை யங்கியற்றி வெளிப்படுத்து வீருமையே இப்படிச்சொன் னாரவர்ச கோதரரே யிவரைவிசு வாசியாதோர் 6. எம்பெருமா னோவிசைத்தார் என்சமையம் இன்னுமேதான் வந்ததில்லை உஞ்சமைய மெப்பொழுது மாயத்தமே பாருமைப்ப கைப்பதில்லை இவ்வுலகோ என்தனைப்ப கைக்கிறதே யேனெனிலோ இவ்வுலகின் செவ்வையில் கிரியைகளைத் தீயதெனச் சாட்சியான்கொ டுப்பதாலே |