611. அவ்வுட னூழியன் பணிந்துவேண் டினனே அவன்பதம் விழுந்துகெஞ் சினனே எவ்வள விரக்கம் எளியனா மெனின்மேல் இதுவரை யருளொடு கொண்டீர் அவ்வள வருளே யடியனுக் கருள்வீர் பொறுத்தொரு தவணையே யருள்வீர் செவ்விதா யுமதுக டனையே முழுதும் செலுத்துவே னிரங்குமென் றனனே 612. மாபெருங் கிருபை யடைந்தவ னிவனோ மனம்பொறுத் திரங்கிய துளதோ மாபவி யிவனோ வகையெது மறியா மயங்கிநிற் கிறமனு டனின்மேல் மாசின மடைந்தே வணங்கிநிற் பவனாம் மனுடனா முடனூ ழியன்மேல் மாகொடுஞ் சிறையி லடைத்தன் னவனை தன்கட னடைபடு மளவும் 613. கண்டமாற் றவரா முடனூ ழியரே குரூரம னமுள்ளவன் கொடுமை விண்டன ருடனே யரசனுக் கிதனை மனத்தினில் விசனமே யடைந்தே ஆண்டவ னவனை யழைத்துரைத் தனனே அதிகொடுங் குரூரவூ ழியனே வேண்டினாயெனையே உன்தனுக் கிரங்கி வெகுகட னுனக்கியான் மனித்தேன். 614. இரங்கினே னுனக்கே யதுவித முமேநீ யிதோவுன துடனூழ் யனுக்கே இரங்கவேண் டியதே யுனதுட கடமை இரக்கமில் லாதுழன் றனையே இரக்கமற் றவனுக் கிரக்கமே கிடையா எனச்சொலி மாசின மடைந்தே சரிவரக் கடனை யடைக்கு மளவும் உபத்ரவத் தண்டனை யளித்தான். 615. இப்படி யுமக்குள் ளவனவன் தனது சகோதரன் விரோதமா யிழைக்கும் தப்பிதங் களைநீர் தயவொடும் பொறுத்தே உவப்பொடு மன்னியா திருந்தால் இப்படி யுமக்கே புரிகுவார் நிசமாய் எனதுட பரன்பிதா கடவுள் தப்பிதங் களைநீர் முழுமன தொடுமே மன்னியுந் தட்டிலா தெவர்க்கும். உத்தியோக காண்டம் முதற்பகுதி முற்றிற்று. |