606. பார்த்திபன் தனது பணிவிடை வருடக் கணக்குகள் சோதனை செயவே பார்த்தன னொருவன் கணக்கினி லொருபத் தாயிரந் தாலந் துகடன் கோர்த்துமே கரங்கள் கொணர்ந்தன ரவனை கொற்றவன் முன்னிறுத் தினரே தீர்க்கவே கடனை வழியெது மிலனாய்த் தயங்கியே நின்றனம் மனுடன். 607. தீர்த்தன னவனை மனைவிமக் களையும் பிறிதும வனுக்குள வனைத்தும் சேர்த்துவிற் றதனால் வரும்பொரு ளதனாற் கடனையே செலுத்தவே யுரைத்தான் நேர்ந்ததை யறிந்தே நெருக்கமே யடைந்தோன் உடலுமா வியும்நடு நடுங்கி பார்த்திபன் பதமே பணிந்துமே விழுந்தான் மிகப்பரி தபித்திறைஞ் சினனே. 608. இறங்குவீ ரெனக்கே யெனதாண் டவனே யெனதிடம் பொறுமை கொள்வீர் திறமொடு முமது கடனையே யடைப்பேன் சிறிதுத வணைகொடுத் தருள்வீர் இரக்கமா யெசமான் இவன்படு மவதி நிலைமை யறிந்தே தயவாய் இரங்கியே மனித்தான் இவன்கடன் முழுதும் இவனை விடுதலை செய்தனன். 609. அரசனின் சமுகம் அகன்றுமே யவனும் ஆத்ரமாய்ப் போம்பொழு தவணே அரமனை யினிலே யடர்ந்துநின் றவருள் கண்டன னுடனூ ழியனே சிறந்தவீ விதுவே இரக்கமே யடைந்தோன் சிட்சைநின் றிரட்சை யடைந்தோன் இரக்கமுள் ளவரே யிரக்கமே பெறுவார் பாக்கியரே ரென்பதை யுணரான் 610. பார்த்தது மவன்மேற் சினந்துபாய்ந் தனனே பாய்ந்தடி வேங்கை நிகர ஆத்திர மொடுமே பிடித்தன னவனைக் கழுத்தை நெறித்தனன் கொடியோன் காத்துமே யிருந்தே னிதுதின மளவுந் தீரெனின் கடனையிச் சணமே கூத்திதே மனுடன் பட்டதோர் சடனோ கொஞ்சமே நூறே பணமே. |