601. அவன்திருச் சபைக்குஞ் செவிகொடா னெனிலோ அவனகஞ் கடினமா னவரே அவனுனக் கந்யன் ஆயமே கொளுவேன் அசுத்தனஞ் ஞானியா யினனே எவற்றைநீ ருலகில் பிணிக்கவே யவையே பரத்திலும் பிணிந்தே யிருக்கும் எவற்றைநீ ருலகி லவிழ்க்கவே யவையே பரத்திலு மவிழ்ந்தே யிருக்கும் 602. இருவருங் களிலே யிப்புவி யினிலே கூடியே யெதற்குமே செபிக்க ஒருமன துளராய் காரிய மதற்காய் செபிக்கநீ ருக்கமா யதுவே ஒருவராம் பரத்தி லுள்ளதந் தையரால் அவர்க்கது ஆகுமே நிசமே இருவர லதுமூ வரென்னா மமதால் கூடினா லவர்நடு விருப்பேன். 603. இன்னுமே யுமக்குச் சொல்வதைக் கவனித் திருமெச் சரிக்கை யுமக்குள் உன்சகோ தரனே விரோதமா யுனக்கே யொருதரம் பிைாயிழைத் தனனோ அன்னனைக் கடிந்து கொள்ளவே யவணும் மனம்வருந் தவேமனிப் பருள்வாய் ஒன்றொரு தரமோ ஏழுதர முணர்ந்தே மனம்வரு தவேமனிப் பருள்வாய் 604. சித்தமே யுவந்தே யத்தனு முரைக்க சீர்மொழி கேட்டபே துருவே அத்தனே யெனது சோதர னெனக்கே குற்றமே யடிக்கடி செயிலோ எத்தனை தரமன் னித்தலே நலமாம் எழுதரம் மட்டுமோ எனவே இத்தரை யுளர்க்கே காட்டமேல் வழியே வந்தவ ரிசைத்தன ரிதையே 605. வழுத்துவ திதனை யூக்கமாய்க் கவனி யுன்னுளம் வரைகுவா யிதையே எழுதாம் வரைக்கோ அப்படி யலவே ஏழெழு பதுதரம் வரைக்கும் எழில்மிகு பரம ராச்சிய மதுவே எத்தகைத் தெனவறிந் திருமின் ஊழிய ரிடமே யுள்ளதன் கணக்கைப் பார்த்ததோ ரரசனை நிகர்க்கும். |