595. இச்சிறி யரிலே யெவனொரு வனையும் இழிவா யெண்ணா திருமின் எச்சரிப் புளரா யிருமுரைக் கிறேனே எழில்மிகு பரலோ கினிலே இச்சிறி யவரின் பரமதூ தருமே யெனதுபி தாவுட சமுகம் நிச்சயம் நிதமுந் தரிசனம் பெறுவார் நிசநிச முறைக்கிறே னுமக்கே 76. (4) தவறினவரைச் சபையிற் சேர்த்தல். மத் 18 : 11 - 14. 596. இப்புவி யினில்வந் தார்மனுமகனே யிரங்கிரட் சிக்கவீழ்ந் தவரை எப்படி யுமக்குத் தோன்றுமோர் மனுடன் மந்தையில் நூறா டிருக்க தப்பியொன் றிவற்றில் மந்தை யிலிருந்தே யோடியே தனிக்தே யலைய தப்பியே யலையாத் தொண்ணுற் றொன்ப தாட்டை மலையினில் விடுத்தே. 597. சிதறிய மறியைக் கண்டுமே பிடிக்க தேடா திருப்பனோ அவனே அதனைப் பிடிக்கக் கொள்ளுமோர் மகிழ்ச்சி யடங்குமோ அளவிலே யுரைப்பீர் சிதறாத் தொண்ணுற் ரெுன்பது மறியாற் சீராய்க் கொள்ளுமோர் மகிழ்வில் அதனொரு மகிழ்வோ பன்மடங் கதிகம் யாதுவந் தேகமு மிலையே. 598. எப்படி மனுடன் ஓர்சிறு மறியை யிழக்கம னமற்றிருந் தனனோ அப்படி யதேபோ லிச்சிறி யரிலே அறக்கடை யெனப்படு மெவனும் தப்பியே யொழிந்து போவதும பரம பிதாவுட தயையுள மலவே எப்படி யெனினுஞ் தெய்வசித் தமிதே யெவருமே யடையரட் சையே. 76. (5) மன்னிப்பு. கடன் பட்டவனுவமை. மத் 18 : 15 - 35; லூக். 17 : 3, 4. 599. உனதுசோ தரனே விரோதமா யுனக்கே ஒருபிழை புரிந்திடில் நலமாய் மனதுவந் துடனே சென்றவ னிடமே நலமுறத் திருத்தவே யவனை இனமொடு மவனும் நீயுமே தனித்தே யிருக்கிற பொழுதொரு சமையம் குணமுற அவனின் குற்றமே யெடுத்தே யுணர்த்துவா யவனையன் பொடுமே. 600. அவனுமே யுனக்கே செவிகொடுத் திடிலா தாயமே செய்தனை யவனை அவனுமே யுனக்குச் செவிகொடா திருந்தால் ரண்டுமூன் றுசாட்சிக ளழைத்தே அவனிடஞ் செலுவா யவருட உரையாற் சங்கதி நிலைவரப் படவே அவர்க்குமே யவனே செவிகொடா னெனிலோ அப்புறம் அறிவிநீ சபைக்கே. |