பக்கம் எண் :

திரு அவதாரம்159

 

589.       என்னவிக் கிரியை நன்றல தடுத்தல் தடுக்க வேண்டிய திலையே
              என்னுட பெயரா லற்புதம் புரிவோன் எவனுமே யன்னவ னெளிதாய்
              என்னைக் குறித்தே தீங்கெது முரையான் எனக்கனு கூலமா யிருப்பான்
              எம்முட பகைஞ னல்லனா மெவனும் எமதுட பட்சத்தி லிருப்பான்

590.       உங்களுக் குரைக்கு மிதனை யுணர்வீர் கிறித்துவுக் குரியரா னதினால்
              உங்களுக் கொருவன் ஒருகல சமேநீர் அளிக்க வென்மை நிமித்தம்
              அங்கவன் தனக்கே யுரியநற் பலனை யடையா திருப்பதே யிலையே
              உங்களுக் குறுதி யுரைக்கிறே னிதுவே தவறா தொருபொழு தெனிலும்

76 (3) பலவீனரைத் தாங்கல்.
மத். 18 : 6 - 10; மாற். 9 : 42 - 50; லூக். 17 : 1, 2.

591.       எவனுமே எனின்மேல் விசுவச முளதோர் சிறியனுக் கிடறலே புரிகில்
              அவனுட கழுத்தில் திரிகலைத் தொடுத்தே கடலிலே யமிழ்த்துதல் நலமாம்
              அவதியே யுலகுக் கிடறுகள் நிமித்தம் அவைவரு வதுமவ சியமே
              எவனால் வருமோ இடறுக ளுலகில் அவனுக் கய்யோ அவதி

592.       உன்கர முனக்கே யிடறே செயிலோ உடனே தறித்ததை யெறிவாய்
              உன்பத முன்கே யிடறே செயிலோ உடனே தறித்ததை யெறிவாய்
              உன்னிரு கரத்தோ டுன்னிரு பதத்தோ டக்னியி லாழ்ந்தழி வதிலும்
              உன்னொரு கரத்தோ டுன்னொரு பதத்தோ டடைவதே சீவனுள் நலமாம்

593.       உன்னிய னமுமே யுனக்கிட றியற்றி லுடனதைப் பிடுங்கியே யெறிவாய்
              உன்னிரு விழியோ டொருபொழு தவியா அக்னியிற் றளப்படு வதிலும்
              உன்னொரு விழியோ டுனதநித் தியமாம் சீவனுட் செலுதலே நலமாம்
              என்றுமே யழியா தவறுட புழுக்கள் அக்கினி யெரியுமந் நரகில்

594.       உப்பிடப் படுமே எந்தவோர் பலியும் சாரமே யாகுமுப் பினாலே
              உப்பிடப் படுவான் அக்கினி யினாலே எந்தவோர் மனுடனு முயர்வான்
              உப்புநல் லதுதான் சாரமற் றதெனில் உப்பெதாற் சாரமே பெறுமோ
              உப்புளோ ரெனவே யென்றுமே யிருமின் ஒப்புற வாயிரு முமக்குள்