76. போதனைகள் (1) மனத்தாழ்மை.மத். 18 : 1 - 15; மாற். 9 : 33 - 37; லூக். 9 : 46 - 48. 584. பரமராச் சியத்திற் பெரியவ னெவனோ பரிவொடும் பகருமென் றனரே பரன்குரு இதற்குப் பதிலெது முரையார் பிறிதொரு வினாப்பதிலு ரைத்தார் "வரும்வழி யினிலே விவாதமே புரிந்தீர் எதற்கென வகையா யுரைப்பீர்" ஒருவரு மிதற்கே பதிலெதும் பகரா திருந்தன ரவர்களூ மையராய். 585. எவனுமே யொருவன் முதல்வனா யெவர்க்கும் மகிமையு ளோனென விரும்பின் அவனுமே யெவர்க்கு மறக்கடை சியனாய்ப் பணிவிடை யாளனா குவனே எவனுமிச் சிறிய குழந்தையை நிகர இருக்கவே வேண்டுமென் றுரைத்தே அவரொரு சிறிய குழந்தையை யெடுத்தே நடுவினில் நிறுத்தியே யுரைத்தார். 586. மனமே திரும்பிப் பிள்ளைகள் நிகர மனத்தினிற் றாழ்மையே யலையோ இனமொடு பரம ராச்சியத் தினுளே யும்க்கிடங் கிடைப்பதே யிலையே தனக்குளே பெருமை தள்ளியே தனையிக் குழந்தை போற்றாழ்த் துவோனே உனதமாம் பரம ராச்சியத் தினிலே உயர்பெரி யோனென விருப்பான். 587. இப்படி யுளதோர் சிசுவை யொருவன் ஏற்பனோ எனதுநா மமதால் அப்படி நடப்போன் எனையுமே யதனால் அன்பொடு மேற்பவன் நிசமே இப்படி யெனையே யருளொடேற் பவனோ என்னையேற் பவனுமே யலாதே இப்புவிக் கெனையே யனுப்பின வரையே யேற்பவ னாகுவன் நிசமே. 76. (2) நற்பலனடைதல் மாற் 9 : 38 - 41; லூக். 9 : 49 - 50 588. ஈதவர் அருளாய்ச் சொல்லியே வரவே யிடையிலே பேசின னருளன் போதக பெரியோய் கண்டோ மொருவன் புறத்துள அந்நிய னொருவன் நாதனே யுமது நாமமே யதனால் நலமொடே பேய்களைத் துரத்த பேதமே யிவனே நாங்களோ தடுத்தோம் நமையவன் பின்செலா ததனால். |