578. இருபது வயதே நிறைந்துள மானுடன் யூதரி லெவனுமா லயத்துத் திருப்பணி விடைக்காய்ச் செலுத்துமோர் வரியை யுங்குரு செலுத்துவ திலையோ வருடமா மிதிலே வழக்கமாய்ச் செலுத்தங் காலமுங் கடந்துபோ யினதே திருவரோ வரியைத் தருவது மிலையோ என்பதிற் சொல்கிறிர் எனவே. 579. இப்படி யுரைக்குங் காரண மெதுவோ செலுத்திவ ருகிறரெங் குருவே எப்படி யெனினு மிவ்வரு டமுமே செலுத்திவி டுவரிது நிசமே இப்படி யுரைத்தே வீட்டினுட் செலவே யிவன்சொலு முனாற்குரு பரனே எப்படி விடயந் தோன்றுதோ வுனக்கே யிசைப்பாய் சிமியனே நலமாய். 580. வாங்குகின் றனரே யிவ்வுல கரசர் தீர்வை வரியே வகையொடும் வாங்குகின் றதுரே தம்மக ரிடமோ மற்றஅந் நியர்களி னிடமோ வாங்குகின் றனரே யந்திய ரிடமே மக்களிடமல வென் றனனே பாங்கொடு சிமியன் சொல்லவு மவனைப் பார்த்துரைத் தனரிதே வசனம். 581. அப்படி யிருக்க மக்களோ செலுத்த அவசிய மிலையே சொலுவாய் எப்படி யிருந்தும் நாமவர்க் கிடறாய் இருக்கா திதுவிதம் நடப்பாய் அப்பா இப்போ அட்டியொன் றிலாதே அவசரஞ் சென்றுமே கடலில் தப்பா துனது தூண்டிலே யிடுவாய் விரைவினிற் பிடிப்பா யொருமீன். 582. முதல்முத லுனது முள்ளிலே படுமோர் மீன்வாய் திறந்துமே பார்ப்பாய் அதனுள் ளிருக்கும் வெள்ளிப் பணமொன் றதையே யெடுத்துநீ யுடனே அதனையே செலுத்து அம்மனு டருக்கே யீய்குவா யெனக்கா யுனக்காய் அதன்படி நடந்தான் மீனையும் பிடித்தான் அப்பணஞ் செலுத்தினா னுடனே 583. தவறிலா தணுவுங் கற்பனை முழுதுந் தாம்நிறை வேற்றவந் தவரே எவருமே யிடறா திருக்கவே யவரே யிப்ரமா ணம்நிறை வேற்றி தவமுறு குருதஞ் சிசியருக் கதிநன் மாதிரி காட்டினர் சரியாய் அவர்களோ தமது குருவிட மணுகி யங்கொரு கேள்விகேட் டனரே. |