பக்கம் எண் :

166

 

13.        நேர்மையாய் நடக்க நேர்மை கற்பனை மோசே யளித்தன னுமக்கே
              நேர்மையாய் நிசமாய் அக்கற் டனையுள் சிறிதெனு மநீதியே யிலையே
              ஓர்மையா யுமக்குள் ளெவனுமே யொருவன் அப்படி நடப்பது மிலையே
              சீர்மையோ உமக்கே உரையுமுண் மையை தேடுவ தெனைச்கொல எதற்காய்?

14.        என்தனைக் கொலவே தேடுவ தெதற்காய் என்றவ ரிசைக்கவே முனிந்தார்
              உன்தனைக் கொலவே தேடுவோ னெவன்நீ பேய்பிடித் தோரென வுரைத்தார்
              என்னஎல் லவரும் என்னொரே கிரியை யதைக்குறித் ததிசயிக் கிறீரே
              முன்னதாம் விருத்த சேதன முறைமை மோசெபின் னமைத்தா னுமக்கே.

15.        ஓய்வுநா ளினிலே யொருவனை நலமாய் விருத்தசே தனஞ்செய் கிறீரே
              ஓய்வுநா ளொருவன் விருத்தசே தனமே யடைந்தால் விதிமீ றுவதில்
              ஓய்வுநா ளினிலே யொருமனு டனையான் முழுவதுஞ் சுகப்படுத் தினதால்
              காய்மகா ரமொடு கடினமா யெனின்மேல் கடிரெரிச் சல்கொளல் தகுமோ

16.        எவரையுந் தீர்ப்பீர் நீதியின் படியே தோற்றமே போற்செயீ ரெனவே
              அவணிருந் தவராஞ் சாலமின் மனுடர் செப்பின ரேயிது விதமே
              இவனையே யலவோ இங்குள மனுடர் கொல்லவே தேடுவ தறிவோம்
              இவன்பே சுகிறான் ஏதுமே தடையில் யாருமே பதிற்சொல விலையே.

17.        இவன்மெயாய்க் கிறித்தே யென்றறிந் தனரே அதிகா ரிகளே நிசமாய்
              அவர்வரும் பொழுதே யெவ்விட மிருந்தே வருவரென் றெவனுமே யறியான்
              இவனெவ ணிருந்தே வந்தவ னெனவே யறிந்துளோம் எனவுரைத் தனரே
              இவரிதைச் சொலவே போதகம் புரிந்த குருவிசைத் தனர்பெருந்          தொனியாய்.

18.        என்னையு மறிவீர் எவணிருந் துமேயான் உலகுவந் தவனென அறிவீர்
              என்தனின் சுயமாய் வரவிலை யெனையிங் கனுப்பினோர் நிசமுளோ ரறியும்
              இன்னரா மவரை யறிந்திலீ ரவரால் உலகுவந் திருக்கிற படியால்
              என்னையிங் கவரே யனிப்பிய படியால் அவரைய றிவேனிது நிசமே.