19. அப்பொழு தவர்கள் அவரையே பிடிக்க அதிகமாய் வகைதே டினரே அப்படி யிருந்து மவரது சமையம் இனும்வரா திருந்தகா ரணமாய் இப்படி யெவனுந் துணிந்துமே யவரைப் பிடிக்கவே மனங்கொள விலையே தப்பிலை பலரும் விசுவசித் தவர்க்கே கொடுத்தனர் வீறுகொள் சாட்சி. 20. அற்புதக் கிறித்தே யவனியில் வரும்போ திவரிதோ இயற்றுகின் றனவாம் அற்புதங் களிலு மதிகமற் புதங்கள் புரிவரோ எனவறைந் தனரே இப்படி சனங்கள் முறுமுறுப் பதையே யிகல்பரி சேயரே யறிந்தே தற்பரன் கிறித்தைப் பிடித்துமே கொலவே தகுந்தவோர் முயற்சிசெய் தனரே. 21. பெரியவர்ச் சகரே பரிசயர் பெரியோர் பலாத்கா ரமாயே பிடிக்க திறமை யுள்ள சேவகர் சிலரை யவசர மாயனுப் பினரே அறங்கிளர் பரனோ ஆலயந் தனிலே யருளுப தேசமே புரிய பரன்திருக் குருவைப் பற்றவந் தவரோ மறைந்து நின்றனர் சனத்துள். 22. இன்னமும் மிடம்யா னிருக்கிற பொழுதோ சொற்பமே யிதுகடந் ததன்பின் என்னை யுலகுக் கனுப்பினோ ரிடமே யேகுவே னறிந்துகொள் ளுவீரே என்னைக் கருத்தாய்த் தேடினும் விரும்பி யென்னையோ காணவே முடியா இன்னுமங் கிருக்கு மிடத்தினுக் குமேநீர் வரமுடி யாதென வுரைத்தார். 23. இவ்விதம் பரனே யிசைக்கயூ தருமே யிதுவிதம் பேசினர் தமக்குள் எவ்விடஞ் செலுவா ரிறியா விடமோ நலமொடு கிரேக்கருக் குளேயோ அவ்விடஞ் சிதறி யிருப்பவர்க் குளேபோய் கிரேக்கருக் குபதசஞ் செயவோ எவ்விதக் கருத்தோ இவர்சொலும் வசனம் புரியவில் லெமக்கென் றனரே. 24. பண்டிகைக் கடைநாள் முக்கிய தினத்தில் பரன்நின் றுரத்ததோர் தொனியாய் எண்டிசை யெவணுந் தாகமுள் ளவனோ எனதிடம் வந்தவன் பருக விண்டதாந் திவ்விய வார்த்தை தனையே விசுவசிப் போனுள மிருந்தே என்றுமே யழியா உயிரே யருளும் உயிர்நீர் நதிகளா யோடுமே. |