25. ஆவர்மெயாய்க் கிறித்தே யென்றுமே யவரை விசுவசித் தேற்பவ ரெவரோ அவரனை வருமே பெற்றனு பவிக்கும் ஆவியை யேகுறித் துரைத்தார் எவருமீட் படைய வந்தவ ரிவரே யின்னும கிமைப்படா ததனால் அவரருள் பவராந் திவ்யஆ வியரோ இன்னும ருளப்பட விலையே. 26. இந்தவார்த் தைகளைக் கேட்டவ ரநேகர் இவர்மெயே தரிசியென் றனரே சந்தத மிருப்போர் கிறித்திவ ரெனவே சாற்றினர் மறுசிலர் பலமாய் அந்தமார் கிறித்தே யிப்புவி வருங்கால் அவர்வரு கைகலிலி யிருந்தே இந்தவி தமேதான் சத்திய மறையில் எழுதியே யிருப்பதை யறிவீர். 27. வேந்தனாங் கிறித்தோ நம்முனோன் தவீதென் வேந்தனின் வமிசமே யிருந்தும் வேந்தனே யுதித்த பெத்தலை யிருந்தும் வருவரே மெய்யெனச் சிலபேர் சாந்தமுந் தயையுஞ் சார்ந்துமே நிறைந்த தற்பரன் கிறித்துவைக் குறித்தே வாய்ந்ததே பிரிவே யிவ்விதம் வகையாய்க் கூடியி ருந்தவராஞ் சனத்துள். 28. அங்குள கிலரோ பிடிக்கவே யவரை மனதுள ராயிருந் தனரே துங்கனா மவரைப் பிடிக்கவே யவர்மேல் தமதுகை போடவே துணிவில் அங்குநம் பரனை பிடிக்கவந் திருந்த அதிபரின் சேவகர் திரும்பி தங்களை விடுத்த பெரியவர் சபையோர் பரிசயர் தமையே யடைந்தார். 29. அந்தவூ ழியரே யவ்விடம் வரவே யதிபரோ அவர்களை முனிந்தே வந்ததிப் படியேன் எங்கவ னகன்றான் ஏனவன் வரவிலை யிவணே இந்தமா னுடனே பேசுகின் றதேபோல் எவனுமென் றுமேபே சினதில் எந்தவி தமுமோர் குற்றமே யிலையே யெதுவிதங் கொணருவோ மவனை. 30. அதிசயித் தனரே யதிபரா னவரே நீவிரும் மோசமா யினீரே அதிபருக் கழுமோ பரிசயர்க் குழுமோ யாதொரு மனுடரு மெவரோ பதிதனா மிவனை விசுவசித் தனரோ பின்பற் றினவரு முளரோ மதியிலா தவரே யறிந்திலர் மறையே யின்னவர் சாபமுற் றவரே 31. அந்தரங் கமாயே முன்னொரு இரவில் அவரிடம் வந்தவ னொருவன் நிந்தனைக் கதிரும் நிக்கதே முவுமே நீதியாய்ச் சொல்லின னவர்க்கே எந்தவோர் மனுடன் என்னசொல் லினனென் லதையாங் கேட்டவன் புரிந்த எந்தவோர் கிரியை பார்த்தறிந் துமேயா மவற்றை நிச்சயிப் பதின்முன். |