32. அவனையாக் கினையாந் தீர்ப்பிடு வதற்கே நியாயமா யுரிமை யுளதோ எவனையு மிதுபோற் செய்யவே யெமக்கே நியாயவி தியுஞ்சொல விலையே இவனிது சொலவே கேட்டவே ளையரோ நீருமோர் கலிலிமா னுடனோ எவனுமோர் தரிசி கலிலியி லிருந்தே யெழும்பின் திலையறிந் திலீரோ. 33. தீமையே செயவே உறுதிகொண் டவராய்ச் குழுமியே யிருந்தவன் னவரே வாய்மையற் றவரே வகையெது மறியா தவரவ ரகமடைந் தனரே காய்மகா ரமொடு களைத்தவ ரவரே யிரவினிற் கண்ணயர்ந் துறங்க வாய்மைசாட் சியரா யவனிவந் தவரோ ஏகின ரொலிவமா மலைக்கே. 34. இரவெலாம் மலைமேல் பரமதந் தையொடே யிருந்தனர் செபத்தினிற் றரித்தே இரவுமே கழிய மலையினின் றிறங்கி யடைந்தனர் திருவா லயமே பரகுரு வரவே யடைந்தனர் பரிவாய் அவரிடஞ் மக்கள் யாவரும் அறக்கட லிறைவன் அருளுட னவர்க்கே யருளுப தேசமே யறைந்தார். 79. பொதுமகள்.யோ. 8 : 3 - 11 35. உபதே சமேசெய் போதுவந் தனரே பரிசயர் பாரக ரொருமித் தவசர மொடுமே பேச்சைத் தடுத்தே யவர்முன் அணங்கை நிறுத்தி விபசா ரமேசெய் தாளிதோ இப்பெண் கைமெயாய்ப் பிடிபட் டனளே அபரா தியிவள் மோசே விதித்தார் கல்லெறிந் தவர்களைக் கொலவே. 36. சாதுவே யிதற்குச் சாற்றுவ தெனநீர் கேட்டனர் சோதனை செயவே வேதனா மவர்மேற் குற்றமே சுமத்த வேண்டி யிவ்விதங் கேட்டனரே வேதவு ரைநிறை வேற்றவந் தவரோ சொல்லவில் லோர்பதி லிதற்கே சாதுவா மவரே சட்டெனக் குனிந்தே தரைமே லெழுதினர் விரலால். 37. பங்கமே செயவே பாய்ந்துவந் தவரோ ஓய்விலா தலட்டவே பரனை துங்கனாம் பரனே பார்த்துமே நிமிர்ந்தே சொல்லின னொரேயொரு வசனம் உங்களிற் பவமே யற்றவ னெவனோ உடனே முதற்கல் லெறிக பொங்குமா கருணைப் புண்ணியன் திரும்ப தரைமே லெழுதினர் குனிந்தே. 38. முற்றுமே துறந்து வந்தமுன் னவன்தாம் இவ்வுரை யேமொழி யவுமே குற்றவா ளியெனத் தீர்க்கவே விரும்பி வந்தவர் மனதுகுத் தியுமே குற்றமே சொலியே கண்டனஞ் செயவே கொண்டுவெட் கமேமனங் கலங்கி சற்றுநே ரமேயன் னோதனித் தனியாய்ச் சட்டென அவணிருந் தகன்றார். |