39. தனித்துநின் றனரே சற்குரு தனித்தே நிற்கவே நடுவிலவ் வணங்கே குனிந்தவர் நிமிர்ந்தே பார்க்கவங் கிலையே குற்றமே சாட்டினா ரெவரும் தனித்துநின் றிருந்த மாதினை விளித்தே கேட்டனர் சாந்தசற் குருவே முனிந்துமே யுனின்மேற் குற்றமே யுரைத்த மூப்பர் மற்றவர் எவணோ? 40. .ஆக்கினைக் குளுனை தீர்க்கவே யிலையோ அவர்களி லெவனுமோ ஒருவன் ஆக்கினை யடையப் பாத்ரமா னவளோ ஆண்டவா இலையென் றுரைத்தாள் ஆக்கினைக் குளுனை தீர்ப்பது மிலையான் ஆர்சமா தானமாய்ச் செலுவாய் பாக்கிய மடைந்தாய் தூய்மை யடைந்தாய் இனிப்பவ மிழையா திருப்பாய் 80. ஆலயத்தில் உரையாடல் - ஒளி - தன்னுரிமை.யோ. 8 : 12 - 59. 41. திருப்பரன் திரும்பிப் பார்த்துமே சனத்தைத் திருவாய் மலர்ந்துரைத் தனரே இருண்டவிவ் வுலகின் பேரிரு ளகற்றும் அருளொளி யாயிருக் கிறேன்யான் இருளிலே நடவான் என்பினே செலுவோன் இருப்பா னுயிரொளி யடைந்தே இருளெனும் பவமெஞ் ஞானத் திலும்நின் றடைகுவன் விடுதலை மீட்பே. 42. முன்னவ னிதனைச் சொல்லவே கேட்டோர் பரிசயர் மொழிந்தனர் முனிந்தே உன்னையே குறித்தே சாட்சிநீ கொடுத்தால் உனதுசாட் சியோயொரே சாட்சி தன்னையே குறித்தே சாட்சிதான் சொலுவோன் சாட்யோ சத்திய மிலையே என்னையே குறித்தே சாட்சியான் கொடுத்தும் என்னுட சாட்சித் தியமே. 43. ஏனெனி லறிந்தே யானிருக் கிறேனே யெங்கிருந் துவந்தே னெனவே நானெவண் நலமாய்ச் செல்கிறே னெனவும் நானறிந் திருக்கிறேன் நிசமாய் நான்வரு கிறதே யெங்கிருந் தெனவும் நானெவண் செல்கிறே னெனவும் ஞானமா யறிந்தே நீரிருக் கிறீரோ நீவிரோ அறிந்ததில் நலமாய். 44. தீர்க்கிறீர் நிசமே யாரையுந் திடமாய் மாமிசத் துக்குரி யதீர்ப்பே தீர்க்கிற துளதோ யானுமே யெவர்க்ருந் தீர்ப்பிடு கிறதிலை யெதற்கும் தீர்ப்பிடி லெனது தீர்ப்புமே நலமாய் நீதியாஞ் சத்தியப் படியே தீர்ப்பிடு மெதுவும் நீதியே னெனிலோ யான்தனித் திருப்பதில் திடமே. |