45. இருவரா கவேயா மிருக்கிறோ மறிவீர் யானும னுப்புதந் தையரும் இருவரின் சாட்சி நிசமென வுமது வேதம திலெழுதி யுளதே தருகிறே னெனையே குறித்துமே தகுந்த சாட்சியே நலமிக நிசமே தருகிறா ரெனையே யனுப்புதந் தையருஞ் சாட்சியே யெனையே குறித்தே. 46. என்னசொல் லுகிறாய் உன்பிதா எவரோ எனப்பரி சேயரே வினவ என்னை யறியீர் இப்படி யிருக்க என்பிதா எப்படி யறீவீர் என்னை யறிந்தோன் என்பிதா வையுமே நிச்சய மறிவா னெளிதில் என்னை யறிந்தே யிருப்பீ ரெனிவென் தந்தையும் அறிவீர் நிசமே. 47. திருப்பதி யினில்தெய் வாலயத் திருந்தே திருவுப தேசமே செயுங்கால் தருமமே யிடுமோர் பெட்டிவைத் திருந்த தலத்தினி லுளசனங் களுக்கே திருக்குரு தமது போதனை களையே திடமொடு கூறின ரவர்க்கே ஒருவனு மிவரைப் பிடிக்கவே யிலையே உறுபொழு தினும்வர விலையே. 48. நானினு முமக்கே நவில்கிற வசனம் நலம்பெறக் கேட்டறிந் துணர்மின் நான்சொலு கிறேனே நலிந்துதே டுவீரே யுமதுபா வங்களில் நசிப்பீர் நான்செலு மிடத்தை நலிந்துதே டினுமே வரமுடி யாதுமா லெனவே ஏனிதை யுரைத்தார் இதன்கருத் தெனவென் றீவர் களோயோ சித்தனர். 49. இவன்செலு மிடத்துக் கேயாஞ் செலவே கூடிய திலையென வுரைத்தான் இவனென செயுவான் கொல்வனோ தனையே யென்றிசைத் தரைவர் தமக்குள் இவர்களை விளித்தே செப்பினர் குருவே நீரிழி வினிலிருந் துதித்தோர் உவந்துணர் வொடுமே யேற்றரு ளுவீரே யானுயர் விருந்துதித் தவனே. 50. தீயவை நிறைந்த இவ்வுல கிருந்துண் டானவர் தீயரா குவீரே மாயமே நிறைந்த மண்ணிதி லிருந்தே வந்தவன் யானல னிசமாய் தீயவா முமது பாசங் களிலே தீய்ந்துபோ வீரே யதனால் நேயமா யவரே நானென எனையே நீர்நம் பவிலை மடிவீர். 51. யாவரோ நீவிர் கேட்கயூ தருமே யானுமக் காதியி லிருந்தே ஆவலா யுரைக்கப் பட்டிருந் தவரே காத்திருக் கிறீர்வர அவரே மேவியே யினுமே யுங்களைக் குறித்தே பேசவுந் தீர்ப்புமே செயவும் காவியம் நிகர காரிய மூளதே முழுவதும் யானுரைப் பதிலை. |