52. சத்திய முளரே நிச்சய மெனையிச் சாவுல கனுப்பிய அவரே சத்தியத் தையான் கேட்ட வரிடமே சாற்றுகின் றேனுல கிதற்கே சத்திய மதற்கே சாட்சியா னவரே சாற்றிய வசனமா மிவைகள் சத்திய பரனாம் நேசதந் தையரைக் குறித்ததென் றறியா திருந்தார். 53. அறிந்தில ரதனா லறைந்தன ரவர்க்கே அவருணர் வடையவே யருளாய் அறிகுவீர் நலமாய் மனுமைந் தனைநீர் அவனியி லுயர்த்தின பிறகே அறிகுவீர் நிசமாய் அவர்யா ரெனவும் யான்செய விலையெதும் சுயமாய் பிரியமா யெனது பிதாவுரை யதேபோ லிவைகளைச் செய்கிறே னெனவும் 54. இதோஎனை யுலகுக் கனுப்பின வரேதாம் இருக்கிறா ரென்னொடும் நிசமாய் பிதாவினுக் குவப்பாம் விடயமே யனைத்தும் பிரியமா யானியற் றுவதால் பிதாவென் னொடுமே யிருப்பதா லெனையே தனித்திருக் கவிடவே யிலையே இதோஇது சொலவே யவணுள பலபேர் விசுவசங் கொண்டன ரிவரிடம். 55. நித்திய பரனாம் நிர்மலன் தமையே விசுவசித் தயூதருக் குரைத்தார் சத்தியம் எனது சீடரே நிசமென் னுபதே சத்திலே நிலைத்தால் சத்தியத் தையும் நீர் காணுவீ ருமையும் சத்தியம் விடுதலை செயுமே சத்தியத் தினுக்கே சற்றெனு மிணங்க மனமிலார் சாற்றினர் பதிலாய். 56. அடிமைக ளவராம் ஆபிரா முடைய அந்தமார் சந்ததி நிசமாய் அடிமைக ளெனயா மெப்பொழு துமிலை அப்பொழு திப்பொழு தெவர்க்கும் அடிமையா னவர்க்கே மீட்பவ சியமாம் அப்படி யலரா மெமையே விடுதலையே யடைவீ ரென்றுரைப் பதுவே யெப்படி யதுவிந் தைதான் 57. அடிமையே நிசமாய் பாவமே புரிவோன் எவனுமே அப்பவத் தினுக்கே அடிமைக ளலவென் றுறைக்கிற துமேநீர் அடாதென் றுறைக்கிறே னுமக்கே அடிமையா னவன்தன் னாண்டவ னகத்தில் நிலைத்திருப் பதிலையெப் பொழுதும் முடிவிலாதிருக் குமரன் முன்னவ னகத்தில் நிலைத்திருக் கிறாரெப் பொழுதும் |