58. அறியுமிவ் வசனம் மீட்புமே யடைவீர் குமாரனே விடுதலை செயிலோ அறிந்திருக் கிறேனே யும்மைக் குறித்தே யாப்ரகாஞ் சந்ததி யெனவே தெரிகிற தெனது செவ்யபோ தகமோ உம்முளே யிடம்பெற விலையே திருக்குண முளரே கொல்லவே யெனையே தேடுமோர் காரண மதுவே. 59. என்பிதா விடமே கண்டவை யெவையோ அன்னவை சொல்கிறே னுமக்கே உம்பிதா விடமே கண்டவை களையே செய்கிறீ ருவப்பொடென் றனரே எம்பிதா அபிரா மென்பவர் எனவே இறைவனோ யிசைத்தனர் பதிலாய் உண்மை ஆபிரா மும்பிதா வெனிலோ நீரவன் மக்களு மெனிலோ. 60. திடவிசு வசியா மவன்கிரி யைகளைத் திடமொடு செய்குவீர் நலமாய் கடவுளி னிடமே கேட்டசத் தியத்தைக் கனிவொடு கூறினே னுமக்கே அடமொடு மெனையே கொல்லநா டுகிறீர் ஆப்ரகாஞ் செயவிலை யதுபோல் விடம்நிறை யுமது தந்தை கிரியை விருப்பொடு செய்கிறீர் எனவே 61. வேசை யராகப் பிறந்தவ ரலயாம் விபசா ரச்சந் ததியில் பேசுதற் கரியபெ ருமைவாய்ந் தவராம் ஒரேபிதா எங்களுக்கு குளரே மாசிலார் மகத்வர் வலுவுயர் கடவுள் வான்பிதா ஒரேதந் தையரே மாசறு பிறிதோர் மனுடனு மிலையே பிறிதெவ ரெம்பிதா அலவே 62. உன்னதக் கடவு ளும்பிதா வெனிலோ எனதிட மன்புகொண் டிருப்பீர் மன்னுநித் தியரே மாவல கடவு ளிடமிருந் திறங்கிவந் தவன்யான் என்னுட சுமமாய் யான்வர விலையே யெனையிவ ணனுப்பினா ரவரே என்னுட வசனம் ஏனறிந் திலீர்நீர் எனதுரை செவிசெுாள மனமில் 63. உங்களின் தகப்பன் பிசாசா னவனா லுற்பவித் தவர்நீர் நிசமாய் உங்களின் தகப்ப னிச்சைப் படிநீர் உவப்பொடு செயமன முளரே வஞ்சக னிவனோ ஆதியி லிருந்தே மனுக்கொலை பாதகன் நிசமே வஞ்சகத் தினாலே நம்பினோ ரவனை வன்கொலை யாய்மடி கிறரே 64. சத்திய மவனி லில்லையே யதனால் நிலைக்கவே யில்லைசத் தியத்தில் நித்தியம் புளுகள் தந்தைபொய் யினுக்கே நிகரில னிதிலா தலினால் தட்டிலை யவனுக் கில்லை தடையே நிதமவன் பொய்சொலும் பொழுதே தட்டெது மிலதாய்த் தன்சுய மிருந்தே தடையிலா துரைக்கின் றனனே |