பக்கம் எண் :

174

 

65.        உத்தம மொடுமே சக்தியத் தையான் சொல்கிறே னாதலா லுமக்கே
              மெத்தவே விசனங் கொள்கிறீ ரெனின்மேல் விசுவசிப் பதுமிலை யெனையே
              சத்திய மதையே கூறுமென் னிடமே சற்றெனும் பாவமுண் டெனவே
              சத்திய மொடுமே வுங்களி லெவனுங் குற்றமே சாட்டவே முடியா.

66.        எவனுமே யொருவன் திருப்பிதாப் பரனா லுதித்தவ னானவ னெனிலோ
              அவனே கடவுள் திருவுரை களுக்கே செவிகொடுக் கிறானா வலொடே
              கவனியு மிதனைப் பரன்கட வுளரால் யுதித்தவ ரில்லைநீ ரதனால்
              அவைகளுக் கிணங்கச் செவிகொடா துமேநீர் அவைகளை யேற்றதுமே யிலையே.

67.        குருபர னிதனைக் கூறவே யவர்கள் கொக்கரித் தெழும்பின ரவர்மேல்
              எரிச்சலா யினரே யேசின ரவரை யேற்றப திலேசொல முடியா
              சரியிதே யுனையாம் சாற்றுகி றதேச மாரியன் பேய்பிடித் தவனே
              வெறிபிடித் தவராய் வீணுரை சொலவே வினையகற் றவந்தவ ருரைத்தார்.

68.        பேய்பிடித் தவனில் என்பிதா வையான் மகிமை செய்கிறேன் நிசமாய்
              காய்ந்துமே யெனைநீர் தூடிணிக் கிறீரே கனக்குறை செய்கிறீர் நிசமே
              ஆய்ந்துதே டியுமே யானலை கிறதில் மகிமை யேயெந் தனுக்கே
              ஆய்ந்துதே டியுமே தீர்ப்பவர் நியாயம் அருட்பர னொருவரு முளரே.

69.        என்னுட வுரையை யேற்பவ னெவனோ அதையே கொள்பவ னெனிலோ
              என்றுமே மரணங் காண்பதில் லவனே யெனநிசஞ் சொல்கிறேன் நிசமாய்
              என்றிதை யிறைவன் சொல்லயூ தருமே யினுமிகச் சீறின ரவர்மேல்
              நன்றிப் பொழுதே நாமறிந் துளமே பிசாசுபி டித்தவ னெனவே.

70.        மரித்தரப் பொழுதே ஆபிராந் தந்தை மற்று தரிசியர் எவரும்
              மரிப்பதே நிசமே மனுடனா மெவனும் எப்படிப் பட்டவ னெவனும்
              ஒருவனென் வசனம் ஊன்றியே பிடித்தே கைக்கொண் டாலொரு பொழுதும்
              மரிப்பதே யிலையே யென்றுநீ மறுத்தே வற்புறுத் துகிறா யலவோ.

71.        என்னசொல் லுகிறாய் எம்பிதா அபிரா மவரிலும் நீபெரி யவனோ
              முன்னுள எவரும் மாண்டுபோ யினரே முன்னுள தீர்க்கரும் மரித்தார்
              இன்னவி தமேநீ எப்படிப் பட்டோ னாக்குகின் றாயிப் பொழுதே
              இன்னவி தமாயே கோபமாய்ச் சொலவே யிவ்வித முரைந்தனர் பரனே.