பக்கம் எண் :

திரு அவதாரம்175

 

             

72.        என்னையே மகிமை செய்குவே னெனிலோ இம்மகி மைவீண் நிசமே
              என்னையே மகிமை செய்கிறா ரொருவர் அவரெனின் பிதாஅவ ரையேநீர்
              நன்மன மொடுமே சொல்கிறீர் நலமாய் எமதுட கடவுளே யெனவே
              என்றுசொல் லினும்நீர் எள்ளள வெனிலும் அறிந்துகொள் ளவேயிலை நிசமாய்.

73.        அவரை அறிந்தே யிருக்கிறேன் நிசமே யறிந்திலே னென்றுரைத் திடில்யான்
              அவமாம் உமைப்போற் பொய்யனா யிருப்பேன் எனினுமே யானறிந் தவரை
              அவரது வசனங் கொண்டுளேன் நிசமே யுமதுபி தாஆ பிரகாம்
              அவாவொடு மிருந்தான் காணவென் தினமே களித்தனன் கண்டத் தினத்தை.

74.        ஆபிரா மைநீ கண்டது முளதோ ஐம்பது வயதிலை யுனக்கே
              ஆபிரா மவனே தோன்றுவ ததன்முன் மெய்மெயா யானிருக் கிறேனே
              காபிரா வெழும்பிக் கல்லெறி யவுமே கைகளிற் கற்களே யெடுத்தார்
              ஆபிரா முடைய தெய்வமோ மறைந்தே யன்னவர் நடுநின் றகன்றார்

81. பிறவிக் குருடன் பார்வையடைதல். யோ. 9.

75.        அச்ச னங்கிருந் தகன்றப் புறஞ்செலும் பொழுதில்
              பிச்சை கேட்டொரு பிறவியிற் குருடனங் கிருந்தான்
              பத்தர் பன்னிரு வருமிதைப் பார்த்தவ ரிடமே
              இத்த கைத்தனாய்ப் புவியினிற் பிறந்ததார் பவமோ?

76.        இம்ம கன்புரி தீபவப் பயனிதோ இலையேல்
              இம்ம கன்தனை யீன்றவ ரியற்றிய பவமோ
              செம்மை யாயிதைக் கூறியே தெரிவியும் என்றார்
              இம்ம கன்பவம் ஈன்றவர் பவமுமே யிலையே.

77.        தெய்வகி ரியைக ளிவனிடம் வெளிப்படத் தெளிவாய்
              இவ்வி தம்மிவன் இதுவுல கினிற் செனித் தனனே
              செய்ய வன்பகல் வெளிச்சமே யிருக்கிற அளவும்
              செய்ய வேண்டுமே யெனையனுப் பினவரின் கிரியை.