78. எவனு மொருகிரி யையு மியற்றவே முடியா அவனி யேமறை யவ்விரு ளிரவுமே வருமே புவன மாமிதி லிருக்கிற பொழுதிலிவ் விருண்ட அவனி யாரிரு ளகற்றுமோ ரொளியான் என்றார். 79. ஆர்வ மாயவ ணண்டைசென் றவனிமீ துமிழ்ந்தே சேறுண் டாக்கியச் சேற்றையே நயனமேற் றடவி வேறே தும்மெணாய் சீலவாம்நீ விரைந்து செலுவாய் சேர்ந்து சீர்பெறச் சேற்றையே கழு" வென் றனரே. 80. சீல மாயவர் செப்பிய வாக்கை நம்பியே சீலோ வாமெனுஞ் சீர்குளஞ் சேர்ந்தவன் கழுவ சீல மாயவன் பார்வை யடைந்தான் சிறப்பாய் சீலோ வாமெனிற் சீர்பொரு ளனுப்பப் பட்டோன். 81. அங்க வன்பிறர் அந்தக னாயறிந் தவரே இங்கி ருந்துமே பிச்சை கேட்டவ னிவனே என்றி வர்சொல ஈதிவன் தானவன் எனவே அன்றே சாடை யிலவன் என்றனர். சிலபேர். 82. இன்ன விதமவர் இப்படி அப்படி யிசைக்க அன்னோ னிதனைக் கேட்டு" யான்தான் அவனே என்ன விதமுனின் கண்கடி றந்தன வெனவே இன்ன விதமென இசைத்தன னின்னவர்க் கிவனே. 83. இயேசு வென்னுமோர் மாவலர் வந்தென திடமே பாச மாகவே பாரிலே சேறுசெய் தனரே நேச மாகவே கண்களிற் பூசினர் நிசமே ஆசை யாய்ப்போய்க் கழுவுசீ லோவா மிலென. 84. சொற்ப டிக்கியான் சுறுக்கெனச் சேர்ந்துசீ லோவாம் நற்சு கம்பெறக் கழுவிநற் பார்வை யடைந்தேன் இப்போ தெங்கவர் என்அவர் கேட்டன ரவனை அப்ப னாமவர் இருப்பிட மறிந்திலேன் எனவே. |