பக்கம் எண் :

திரு அவதாரம்177

 

85.        குருட னையே கொணர்ந்தனர் பரிசய ரிடமே
              திருப்ப ரன்குரு சேறுசெய் தவன்விழி திறந்த
              ஓருநா ளானதோ ஓய்தின மாந்திருத் தினமே
              பரிசே யாரவர் கொண்டனர் பரபரப் பதனால்.

86.        எவ்வி தம்விழி யடைந்தனை யென்றவர் வினவ
              இவ்வி தம்மவர் சகதியே தடவியென் விழிமேல்
              அவ்வி தம்மதைக் கழுவியே பார்வையடைந்தேன்
              இவ்வி தம்அவ னிசைக்கவே யிறைவனைச் சினந்தார்.

87.        அந்த மானுடன் ஓய்வுநாட் கைக்கொளா தவனே
              இந்தவே லையைச் செய்தன னாதலா லிவனே
              வந்தோ னிலைவல் லுன்னத ரா"லெனச் சிலபெயர்
              இந்த மானுடன் பாவியா மனுடனா யிருந்தால்.

88.        எவ்வித தஞ்செய் வானிது விதஅற் புதங்கள்
              செவ்வி தாயிது செப்பினர் வேறுசிற் சிலரே
              இவ்வி தத்தினி லாயின ரேயிரு பிரிவாய்
              திவ்ய அன்பருக் கென்செய என்றறிந் திலரே;

89.        அந்த கனையவர் மறுதரம் வினவின ரதனால்
              உந்தன் நயனமே உவப்புடன் திறந்தவ னெவனோ
              அந்த மனுடனைக் குறித்தென நினைக்கிறாய் எனவே
              சிந்தை யிதற்கென சீர்பெறிந் தரிசியென் றனனே.

90.        அந்த கனேவிழி பெற்றதை நம்பவில் லிவரே
              அந்த மனுடனின் தாய்தந் தையரை வினவ
              அந்த கனாயும் மகன்பிறந் தானென அறைந்தீர்
              இந்த மனுடனும் மைந்தனோ இலையோ இசைப்பீர்.

91.        இவனன் னோனெனி லெதுவிதம் நயனமே யடைந்தான்
              அவனெம் மைந்தனே குருடனாய் செனித்தன னறிவேம்
              அவனிப் போவிழி யடைந்ததாம் விதமெதோ அறியேம்
              அவனின் கண்களைத் திறந்தது மெவரென அறியேம்.