பக்கம் எண் :

திரு அவதாரம்23

 

140.       களையொடு துலங்குமா மவர்வதனம் கண்டவர் நயனமே யிலங்குமிக
              களைப்படைந் தவரது மகன்றவராய் நன்குக ளிப்பார் அவர்சமுகம்
              இளைத்தவர் மனத்துய ரடைந்தவரோ இன்சுக மடைவார் அவர்நெருங்க
              விளைகிற பயிரதே முளையினிலே நன்குதெ ரியும்விதம் விளங்கினரே.

141.       வளர்ந்தவர் வயதினி லுயர்ந்துவர வளர்ந்துமே யுயர்ந்தனர் சடலமதில்
              வளர்ந்துமே விரிந்ததே யவரறிவும் வளர்ந்ததே யுனதஞா னமுமேதான்
              வளர்ந்தனர் கடவுளின் கிருபையிலே வளர்ந்தனர் நலமிகு கிரியைகளில்
              வளர்ந்தன ரருள்மிகு குணமதிலே வளர்ந்தனர் மனுடரின் தயவிலுமே.

142.       நாற்றமே யுளதாம் நசரதிலே நன்மையே தோன்றுமோ எனவிகழும்
              நேற்றுமித் தினமுமே சுயஜனத்தின் நிந்தனைக் குரியதாந் தலமிதிலே
              நாற்றமாங் கொடுகுண முடையவராம் நன்மையில் மனுடரின் நடுவினிலே
              சேற்றினில் முளைத்துமே புனிதமுள்ள செவ்விய கமலமாய் விளங்கினரே.

143.       காலமா கவேஜார் டான்கரையில் கர்த்தருக் கேவழிசே வைசெய்வோன்
              ஓலமாய்க் கூப்பிடு வோன்குரலென் உத்தமன் அருளனாம் முன்துதுவன்
              சீலவான் ராஜ்ஜிய சுபவிசேஷடச் செய்திகூ றியேதீக்ஷை கொடுத்தான்
              காலநெ ருங்கவே யவனிடமே சென்றனர் கடிதினிற்றீட் சைபெற.

பாலகாண்டம் முற்றிற்று.