2. உத்தியோக காண்டம் பேய்ப்பரிட்சை தான்ஜெயிக்கப் பேயதனாற் பூவுலகில் மக்களடை பேரவஸ்தை நோய்வருத்தம் கூன்குருடும் ஊமையுமே அங்கவீனம்நொம்பலங்கள் நீங்கவுமே காய்மகார னாமலகை பாவமதாற் கட்டுளானோர் கட்டறுந்தே மீட்படைய வீய்ந்தொழியு மக்களெழப் பேயதுமேல் வெற்றிபெறச் செப்பவர்பா தம்பணிவோம். 1. உத்தியோகப் பிரவேசப் பர்வம் 14. முன்தூதன் தோன்றல். லூக். 1 : 5 - 25; 57 - 79. 1. எருசலேம் பட்டணம் திருப்பதியில் எழில்மிகு கடவுளா லயமதிலே திருப்பரன் சந்நிதி தனிற்றினமுஞ் சிறந்ததூ பபீடமுன் பணிசெயவே திருப்பலி பீடமேற் பலிசெலுத்தி திருப்பணி விடைகளே செயவெனவே அறுநான் காம்பிரி வர்ச்சகரை யமைத்திருந் தனனே தவீதரசன். 2. இருபனி ரண்டெனும் பிரிவுகளி லொருபிரி வழியாப் பெயருளதே இருந்தன னெட்டெனும் பிரிவிதிலே சகரியா வெனும்பெய ருளனொருவன் திருந்தியே ப்ராயமே முதிர்ந்தவனே திருமனை வியர்பெயர் எலிசபெதே குருமுத லாரனென் சிறந்தவனின் குருமுறை வமிசமே யுதித்தவளே. 3. இருவரும் வயதினில் முதிர்ந்தவரே இருவரும் முதிர்ந்தவர் பக்தியிலும் திருப்பர னருளுகற் பனைகளிலும் திருவருள் நியமமோ நெறியினிலும் மருவிலர் குறையெது மிலதவராய் மனதிலும் உரையிலும் நடையிலுமே இருவரும் நடந்தவர் சிறந்தவரே இவர்க்கொரு குழந்தையுஞ் ஜெனித்ததில்லை. |