4. ஒவ்வொரு வகுப்பினுக் கிருகிழமை ஒவ்வொரு வருடமும் முறையுளதே ஒவ்வொரு வகுப்பிலு மிருந்தொருவன் ஒவ்வொரு முறையிலும் பணிசெய்வான் இவ்வொரு மனுடனு மெவனெனவே எடுப்பரோர் வகுப்பிலுங் கிரமமாயே இவ்வொரு ஒழுங்கினிற் பணிசெயவே தெரிந்தெடுத் திருந்தனர் சகரியாவை. 5. ஆர்வமாய்த் துவக்கின னிம்முறையில் ஆலய வூழியன் சகரியாவே ஓர்தினங் காலையி லுட்புகுந்தான் உட்டல மாம்பரி சுத்ததலம் ஏறெடுத் தானவன் தூபகலம் ஏந்திநின் றான்திருப் பீடமுனால் சேர்ந்தவ ரங்கிருந் தேதொழுதார் சீர்மிகு ஆலய மண்டபத்தில். 6. தூபமே காட்டியே நிற்கையிலே தோன்றினன் தூதனே திருத்தலத்தில் தூபபீ டமதின் வலபாகம் தோன்றியே ஜோதியாய்த் துலங்கினனே தூபம தேந்திய அர்ச்சகனோ சோர்ந்துமே நின்றனன் திகிலடைந்தே "ஆபத் தேதுமில் லுந்தனுக்கே அஞ்சிடேல்" என்றவ னுரைத்தனனே. 7. நாடியே வருகிறே னுனதிடமே நலமிகு சுபவுரை சொலவுனக்கே தேடியே யுனதுட ஜெபமதுவே யடைந்ததே திருப்பரன் சமுகமதில் கூடின துமதுட மனவிருப்பம் குணமுறு புதல்வனே யுமக்குதிப்பான் வாடின மனைவியா மெலிசபெதே மகிழுவள் புதல்வனின் ஜெனனமதால். 8. அவனுட திருப்பெயர் அருளனென்பாய் அடைவா யானந் தமேமிகுவாய் அவன்ஜென னமதா லடைகுவரே அதிசய மானந் தமும்திரள்பேர் அதனிருப் பனேயோர் பெரியவனாய் ஆதிப் பரன்நமின் கடவுளின்முன் அவன்தனை யொறுத்துஜீ வியஞ்செய்வான் த்ராக்ஷைர சமுமது வும்பருகான். 9. இருப்பனே தரித்தவன் எலியாவின் இணையிலா ஆவியால் வலமையினால் திருத்தமாய் நடந்துமே வருவனவன் உனதராந் தெய்வமுன் நலமிகவே கருத்தொடு பிதாக்களி னிருதயமே கனிவொடு தாழ்மையே யுளதாக திருப்புல னவர்மிக நலம்பெறவே சிறிய குழந்தையர் புனிதரிடம். 10. ஆவியி னாலவன் நிறைந்திருப்பான் தனதனை யுதரத் திருக்கையிலே மேவியே யிஸரேல் ஜனங்களிலே நிசநிசம் அதிமிகு ஜனங்களையே ஆவியி னேவலால் நடந்தவரே அருள்மிக நிறைந்தவ ரெனவறிய ஆவலாய் யவர்வரத் திருப்புவனே அவர்கடங் கடவுளாங் கர்த்தரிடம். |