பக்கம் எண் :

246

 

519.       மறுசனன காலமைந்தன் மகிமையாச னத்திற்றாம்
              பெருமையுற் றேவீற்றிருக் கபின்தொடர்ந்தோ ராம்நீவிர்
              பெருமையுற் றேவீற்றிருப் பீர்பிறிதா சனம்இராறில்
              இருந்துஞாயந் தீர்க்கஇசரேல் கோத்திரம்பன் ரண்டைத்தான்.

520.       தன்னகந்தன் சோதரர்கள் தன்சகோத ரீயர்கள்
              தன்பிதாதன் தாயையுந் தன்னினத்தவர் மற்றோரை
              பின்னுமனை யாள்பிறிதே பிள்ளைகள்நி லங்கள்தான்
              என்னிமித்த மீதுசுவி சேடநிமித் தந்தானே.

521.       விட்டவன்தன் சீவியத்தில் இங்குவீணென் றாகாதே
              நட்டமில்லை துன்பமோடே நூறுபங்கே மாநன்மை
              இட்டமாயே வீடுகள்தான் தாய்களின்னுஞ் சோதரரொடு
              இட்டமாஞ்ச கோதரிகள் மக்களும்நி லங்கள்தான்.

522.       இம்மையினி லேயடைவான் நன்மைகளே ராளந்தான்
              அம்மையினில் நித்யசீவ னேயடைவான் மெய்யாயே
              அம்மையினிற் பிந்தினோரே முந்திவந்த நேகர்தாம்
              அம்மையினில் முந்தினோரே பிந்திவந்த நேகர்தாம்.

124. திராட்சைத் தோட்டம்-பண்ணையாளுவமை.மத். 20 : 1 - 16
வேறு

523.       பரமரர்ச் சியமே பண்புளோர் பெரிய வீட்டெச மானனை நிகர்த்த
              நரருளே சிறந்தோன் நற்குணம் படைத்தோன் நன்றுபல் பொருளிலுஞ் சிறந்தோன்
              திரமன துடையோன் தன்குண னிவற்கோர் திராட்சைத் தோட்டமே யுளதே
              வரிசைவ ரிசையாய் நின்றவ ணுழைக்கக் கூலியாள் பலரவ சியமே.

524.       அதிவிரை வொடுசென் றாத்திர மொடுமே யமர்த்தினன் கூலியாள் பலபேர்
              பதிவொரு பணமே கூலியே சியுமே யனுப்பினன் பண்ணையி லுழைக்க
              அதின்பினே மணிமூன் றாம்பொழு தடைந்தான் அவசர மொடுகடைத் தெருவே
              கதியிலா தவரே வேலையற் றவராய்க் கண்டனன் சிலர்நிற் பதையே.