பக்கம் எண் :

திரு அவதாரம்247

 

525.       நீங்களுஞ் செலுவீர் முந்திரி வயலில் நேருமாம் வேலைசெய் குவீரே
              வாங்குவீர் பணமே வாக்கின் படியே வாங்குவீர் கூலியே ஒழுங்காய்
              ஆங்குநின் றவரே ஆத்ரமா யடைந்தார் பண்ணையில் வேலைசெய் தனரே
              ஆங்கவ னதன்பின் ஆறுமொன் பதுமாம் வேளைபோய்ச் செய்தனப் படியே.

526.       பின்னுமே கினனே பதினொரு மணியில் கண்டனன் பிறர்சில ரவணே
              என்னசெய் கிறீர்நீர் இப்பகல் முழுதும் என்னோ வேலையற் றவராய்
              என்னசெய் குவம்யாம் இடுபவ ரிலையே யெமக்கெதும் வேலையென் றனரே
              என்வயல் செலுவீர் இடுந்தொழில் புரிவீர் ஏற்படுங் கூலியே பெறுவீர்.

527.       அந்தவே ளையினில் வேலை முடிய அழைத்தனன் காரியத் தனையே
              பிந்தினோர் தொடங்கிக் கூலியே கொடுப்பாய் பிசகா துமுந்தினோர் வரைக்கும்
              அந்தவே ளையிலே பதினொரு மணியில் வந்தவர் முந்திவந் தவணே
              வந்துபெற் றனரே கூலியே வகையாய் ஒவ்வொரு வனுமொரு பணமே.

528.       முந்தி வந்தவரே வந்தனர் முடுக்காய் எண்ணியே யதிகமே பெறவே
              வந்துபெற் றனரே கூலியே வகையாய் ஒவ்வொரு வனுமொரு பணமே
              விந்தை பிந்தி வந்தவ ரிவரே வேலைசெய் தனரொரு மணியே
              முந்திவந் தனம்யாம் நாள்முழு துழைத்தோம் கட்டமுட் டணமுமே சகித்து.

529.       எப்படி யெமையே யிவர்க்குநீர் சமமே யாக்கினீர் எனமுறு முறுத்தே
              அப்படி யிசைத்தோ னொருவனை விளித்தே யறைந்தன னவனுக் கிதமாய்
              அப்பனே யுனக்கே யநீதமா யெதுவும் யானிழைத் ததுமே யுளதோ
              தப்பித மிலையே யொருபணம் பெறவே சம்மதித் தனையே திடமே.

530.       வன்பண மடைந்தாய் குறையெது மிலையே உன்னதை யடைந்தனை செல்லுவாய்
              என்மன முனக்கே கொடுத்ததே நிகர இவனுமே பெறுவதே யுனக்கென்
              என்மனப் படியே யென்னதைச் செயவே யெனக்கதி காரமே யிலையோ
              வன்கண் னெனநீ யிருப்பது சரியோ தயாளனாய் யானிருப் பதனால்.

531.       பிந்திவந் திருந்தும் பிந்தினோர் பரத்தில் முந்தினோ ராவதும் நிசமே
              முந்திவந் திருந்தும் முந்தினோர் பரத்தில் பிந்தினோ ராவதும் நிசமே
              இந்தவி தமேதாம் சீரழைப் படைந்தோர் மாதிரள் பேரா யிருந்தும்
              சிந்தனை செயிலோ சிற்சில பெயரே தெரிந்துளோ ராவரென் றனரே.

II(4) எருசலேம் யூதேயா ஊழிய பர்வம் முற்றிற்று.