பக்கம் எண் :

256

 

48.        இந்தவித மிவ்விருவ ரேற்றியபின் யேசுவையே பின்தொடர்ந்தார் நீங்காதே
              வந்தடருங் கூட்டமாஞ்ச னத்திரளே வல்லபர னைத்துதித்தே தோத்தரித்தார்
              இந்தவிதங் கண்ணிலார்க்கே கண்ணளிப்போர் யாமெதிர்பார்க் கின்றவரா மேசியாவோ
              தந்தையராந் தாவிதுட மைந்தனோதாம் தண்ணளியார் நம்மரசோ என்றனரே.

49.        எரிகோவி னெல்லைகடந் தேகினரே யேசுவையெல் லோருமேதொ டர்ந்தனரே
              பரிவொடுமே யேசுபரன் தம்மையொரே பலியாய்க்கொ டுக்கவேவி ரைந்தனரே
              எருசலேமில் ராசனாகத் தோன்றுவரென் றெண்ணினரே சீடரொடே மற்றவரும்
              அருள்சொறியும் யேசுபரன் சீடரொடும் அண்டினரே பெத்தனியாச் சீமனகம்.

132.பெத்தனி மரியாள் அபிடேகித்தல்.
மத். 26 : 6 - 13; மாற். 14 : 3 - 9; யோ. 12 : 2 - 12.

50.        பரிவொடுமே யேற்றனனே திருப்பரனை பண்பொடுமே சொத்தமானே னாண்டவரால்
              குரூரமாயு யிர்வதைக்குங் குட்டமெனுங் கொடுநோயாற் றுன்படைந்தோன் சைமனேதான்
              அருளுருவாங் குருபரனே யன்பொடுமே வந்தனரே யேழைபெறும் பேறடைந்தே
              அருமையாயு பசிரிப்பேன் என்றவனே யன்பருக்கோர் நல்விருந்தே செய்தனனே.

51.        அந்திகடந் தேயிரவில் நேரம்வர அமர்ந்தனர்வி ருந்தினராய்ப் பலமனுடர்
              பந்தியில்மு தல்வரான யேசுபரன் பதினிருவ ரோடமர்ந்தா ரத்தருணம்
              வந்தவர்வி ருந்தினருள் முக்கியத்தன் மரணத்தி னின்றெழுந்த லாசருவே
              பந்திபரி மாறினள்மார்த் தாவணங்கே படைத்தனளே பலவிதமாம் பட்சணங்கள்.