57. அத்தனது தாழ்குணமே பார்த்தவரைக் கிறித்தேயென் றேயறிந்தோ ரெத்தனைபேர் அத்தனது ஞானவருட் போதனையை யறிந்தவரை யேற்றவரோ மாசிலரே அத்தனது அற்புதமார் செய்கைகள் கண்வர்கிறித் தென்றவரோ பல்பெயரே இத்தனைசு கிர்தமெல்லாங் கண்டிருந்தும் இடறினவர் லக்கமோதான் மாபெரிதே 58. வேதியரோ பாரகரோ மூப்பருமோ வேண்டியதில் லென்றிகழ்ந்தா ரத்தனையே சாதுசேயர் பாரிசேய ரானவருஞ் சத்தியமா காதெனவே தள்ளினரே அதிவலியார் வாழ்வுளரா மாபெரியோர் ஆண்டவரி டம்வரவே வெட்கமுற்றார் வதியிலா மேழையரோ துன்புளரோ வெல்லமென மொய்த்தனரே யீக்களேபோல். 59. வந்தவர்தி ரண்டகூட்ட மாஞ்சனங்கள் மாண்டெழுந்த லாசருவைக் கண்டனரே எந்தவித மாயினதென் றேயறிந்தோர் யேசுமேசி யாவெனவே விசுவசித்தார் வந்தவர டுத்ததினஞ் யேசுவொடே மாறியெரு சாலநக ரேகினரே வந்தவரோ சேர்ந்தவரோ இணைந்தவரோ வழியோடே புகுந்தவரோ மாதிரளே. 133. இயேசு பவனிசெல்லல். மத். 21 : 1 - 17; மாற். 11 : 1 - 11; லூக். 19 : 29 - 45; யோ. 12 : 12 - 19. 60. பெத்தனியா ஊரையே விட்டெகினரே பெத்பகேயுக் கேசமீப மாகவந்தே அத்தனிரு சீடரைத்தம் மண்டையழைத் தங்கெதிரே தோன்றுகிற ஊர்செலுவீர் இத்தனைநா ளின்றுவரை யாரெவரு மேறியிராக் கத்தபமே காண்பீரே அத்தையிவண் கொண்டுவாரும் யார்தடுத்தால் வேண்டுமதே யாண்டவருக் கெண்றுரையும். 61. சித்தமேபோ லன்னவர்போய்க் கண்டனரே யீர்வழிசேர் சந்தியிலோர் வாசலண்டை அத்தனுட சொற்படிய விழ்த்தனரே ஏனவிழ்க்கின் றீரதையென் றார்சிலபேர் அத்தனுக்கு வேண்டுமதே யென்றுறைத்தார் செய்யாதாட் சேபமேவி டுத்தனரே. கத்தபத்தைத் தாயொடுங்கொ ணர்ந்ததன்மேல் வத்திரம்வி ரிக்கவேறிச் சென்றனரே. |