62. சாந்தமுறுங் கத்தபத்தின் குட்டியின்மேல் சாரிவரு வோரிவருன் ராசனாவர் சாந்தகுண முற்றுமேவந் தாரெனவே சாற்றுவீர்சி யோன்குமாரிக்கே யெனவேதான் முந்தியொரு தீர்க்கனேயு ரைத்தபடி முன்னவனே சென்றனரே கத்தபம்மேல் வந்தகுழாம் மாமகிழ்வா யார்ப்பரிதார் வத்திரம்ம ரக்கினைப ரப்பினரே. 63. ஓசியன்னா பாடுகின்ற கூட்டமிதே மாவொலிவச் சாரலைநெருங் கினரே ஓசியன்னாப் பாடியினர் ஓலைகொண்டே மாவொலிவம் நின்றிறங்குங் கூட்டமொடும் "ஓசியன்னா வுன்னதத்தி லோசியன்னா ஓசனாதா வீதுமைந்தா ஓசியன்னா ஓசியன்னா யூதவேந்தே யோசியன்னா ஓசியன்னா வென்றுதுதி பாடினாரே 64. இந்தவிதம் யேசுபரன் செல்லவுமே மாவெழிலுள் வேந்தனேபோற் கத்தபமேல் வந்தனரே மேசியாவே வேந்தன்ாக வந்தனரே ராச்சியம்தா பிக்கவுமே இந்தநமின் நீசநிலை நீங்கவுமே இசரவேலின் மீட்புமின்றேதோன்றியதே வந்தனரே நமையாள மேசியாவே வாழ்த்துவீரே வாதுத்துவீரென் றார்த்தனரே. 65. வருகிறாரே சாலேமே யுன்னரசன் உன்சமாதா னம்வளரும்இன்றுமுதல் வருகிறார்சீ யோன்குமாரி யுன்னரசன் உன்மகிமை யேவளரும்வானளாங் வருகிறாரே தாவிதுட மைந்ததுமே வாழ்கஅவ ராட்சியமே யென்றுமென்றும் வருகிறாரே யுங்களது ராசனிவர் வாழத்துவீரே யும்முடைய ராசனையே. 66. பாடினர்ப ணிந்தனர்தோத் தரித்தனரே உயர்கிறித்தென் றேபரனைப் போற்றினரே ஓடினரே சாடினரே முன்னின்றார் உன்னதரைப் பல்விதமாய்த் தோத்திரித்தார் நாடினர்க ளித்தனர்ந கைத்தனரே நடந்துமலைப் பாதையினிற் சென்றனரே நாடுவே வந்தவராஞ் யேசுபரன் நலமொடுமே யுச்சிமலை சேர்ந்தனரே. 67. இத்துதியின் சப்தத்தைக் கேட்டசிலர் ஈனமனங் கொண்டபரி சேயரானோர் இத்துமது சித்தத்து கேற்றதுவோ இத்துதியா காதெனவ தட்டுமென` இத்துதியென் சித்தத்துக் கேற்றதுவே இத்துதியென் சீடரேபா டாவிடிலோ எத்தனையோ கற்களிதோ காணகிறீரே இத்தனையு மென்துதியே பாடுமென்றார். |