68. மலைச்சிகரம் நின்றிறங்கிப் போம்பொழுதில் மாட்சியுறுங் காட்சியாயே தோன்றியதே தலைநகரே சாலநக ராம்பதியே தான்மகிமை கொண்டிலங்கு மாட்சியாயே தலைமுடிபோ லங்கிலங்கித தான்றுவதோ புண்யதலம் மோரியாவாங் குன்றின்மேல் கலைபலகொண் டேயொளிரு மாதவன்போற் கண்ணெடுத்துப் பார்கவேலா வாலயமே. 69. மகிமையுறு காட்சியிதைக் கண்டவரோ மனதினிலே பல்விதமா யெண்ணினரே மகிமையுறு மிந்நகரில் மேசியாவே மகிமையொடே யான்வரென ஆர்த்தனரே மகிமைமிகு மாபரனைத் தோத்திரித்தார் மகிழ்ச்சியொடே அல்லெலுயா பாடினரே மகிமையொடு செல்பவரா மேசியவோ மனங்கலங்கிக் கண்பெருக்கிச் செப்பினாரே. 70. சமமிலாத பதியாஞ்சா லேம்நகரே சமையமுனக் கித்தினமென் றேயறியாய் சமையமிதை யறிந்திருந்தா லேயுனக்கே யளித்தருளும் பூரணச மாதானமே சமையமிதை யறியாதே போனதினால் நெருக்கியேந சுக்குவருன் சத்துருக்கள் சமதளமா வாயுனது மக்களுமே சர்வநாச மாகுமாதுன் னாள்வருமே. 71. உன்தனது மேசியாவாய் வந்துளேனே யுன்தனது கண்களுமே மூடினதே உன்தனையான் சேர்த்தணைக்க வாஞ்சையே உன்மனமோ மாகடின மானதையோ என்தனது செட்டைகீழ மர்ந்திருந்தால் எந்தவிதத் தீங்குமுனை யண்டுவதில் உன்தனுட அந்தமுமே மாகொடிதாம் உன்னழிவோ மாகுரூரம் நிச்சயந்தான். வேறு 72. திருஅச தாரன் புலம்பினரே சேர்ந்துள திரள்சனங் களித்தனரே அருளுரு வாம்பரன் திருக்குருவே மாவழ கியயெரு சலேம்புகுந்தார் தெருவிலுள் ளவரிவ ராரெனவே தீர்க்கனாம் நசரேத் பதியியேசே அருளுமா விரக்கமுஞ் சுரந்தவராய்ச் சேர்ந்தன ரழகிய வாலயமே. |