பக்கம் எண் :

திரு அவதாரம்303

 

122.       அறியுமென் தந்தையர் வீட்டினிலே யநேகவா சவிடம் முண்டெனவே
              தெரியவே செய்திருப் பேனுமக்கே திட்டமா யப்படி யில்லையெனில்
              தரித்திருங் கொஞ்சநா ளிவ்வுலகில் தாண்டியே செல்கிறே னவ்விடமே
              அரியதா மாட்சியுள் ளோதலமா யத்தமே செய்யயான் போகிறேனே.

123.       நான்சென் றுமக்கொரு தலத்தினையே நலமா யத்தமே செய்தபினால்
              நானிருக் கிறதொரு தவத்தினிலே நலமாய் நீவிரு மேயிருக்க
              நானிவண் மறுதரம் வருகிறேனே நலமுறச் சேர்க்கவே யுமையெனிடம்
              நான்செலு மிடத்தை யறிந்துளீரே நலமொடும் மார்க்கமூ மறிந்துளீரே.

124.       அறிந்திலேம் நீர்செலு மிடத்தினையே யறிவது மெப்படி யதன்வழியே
              அறியுமோர் சாதியு மிலையெமக்கென் றறைந்தனன் தோமா சிசியனுமே
              அறிந்துகொள் விதைவழி யேயான் அபூர்வமாஞ் சத்தியஞ் சீவனுமே
              அறிவீர் யாருமில் யெனையலாதே யருள்மிகு தந்தை யரிடம்வர.

125.       அறிந்திருந் தீரெனில் என்னையே யறிந்திருப் பீரென தந்தையரை
              அறிந்துமே கண்டே யிருக்கிறீரே யிதுமுக லவரையே யென்றனரே
              அறிவீர் காட்டுவீர் தந்தையரை யருளொடு மெமக்கே யிப்பொழுதே
              அறிவோ மதுவே போதுமென அறைந்தனன் பிலிப்பெனுஞ் சீடனுமே.

126.       இன்னுமே யெனைநீ யறிந்திலையோ என்னொடு மித்தனை நாளிருந்தும்
              என்னையே சண்டவ னெவனொருவன் என்தன தந்தையைக் கண்டவனே
              என்னோ இப்படிக் கேட்டாய்நீ எனக்குக் காட்டுவீர் தந்தையென
              என்னிற் றந்தையு மவரிலும்யான் இருப்பதை விசுவசிக் கிறதிலையோ?

127.       சொன்ன வசனம் உமதொடும்யான் என்சுய மானதாம் வசனமல்ல
              என்னில் வசிக்குந் தந்தையரே யிக்கிரி யைகளே நடத்துகின்றார்
              என்னிற் றந்தையு மவரிலும்யா னிருப்பதை நம்புமி னில்லையெனில்
              என்னுட கிரியை நிமித்தமாயே யெனைநம் புவீரே எனவுரைத்தார்.

128.       சொல்லுகி றேனிதை யுங்களுக்கே சொல்லுகி றேனிதே மெய்மெயாயே
              செல்லுகி றேனெனின் தந்தையிடம் செல்வதி னாலெனை நம்புவோனே
              அல்லவில் லாதுமே செய்குவனே யான்செயு மாலருங் காரியங்கள்
              எல்லையில் லாதிதிற் பெரியவையாம் மேலாங் காரியஞ் செய்குவனே.