பக்கம் எண் :

304

 

129.       எதனையுங் கேட்கிலென் நாமமதில் என்பிதா சுதனெனில் மகிமைப்பட
              அதனையே செய்குவே னுங்களுக்கே ஆம்மிகத் திட்டமாய்ச் செய்குவனே
              எதனையுங் கேட்கிலென் நாமமதில் நீங்களே யடைவீர் இதுமெய்யே
              அதனையான் செய்வே னுங்களுக்கே யட்டியில் லாதுமே தடையிலாதும்.

130.       என்னிடம் நீவிரன் பாயிருந்தால் எனதுகற் பனைகளைக் கைக்கொளுமின்
              என்னருட் டந்தையை வேண்டுவேனே யிசைந்தே யுமதுமே லன்புகூர்ந்தே
              இன்றுமென் றென்றுமே யும்மொடுமே யிருக்கவே சத்திய ஆவியராம
              இன்னொரு தேற்றர வாளனையே யிரங்கியே யருள்வா ருங்களுக்கே.

131.       அந்தமா சத்திய ஆவியரை காணா தறியா திருப்பதனால்
              இந்தவு லகமவ் வாவியரை யென்றுமே யடையா திருக்குமெயாய்
              வந்தவ ரும்மொடு தங்கியுமே யுமதுளே தரித்தே யிருப்பதினால்
              எந்தவி தமுமே நீரவரை யினிதா யறிந்துகொள் வீர்நலமாய்.

132.       இன்னுமே யானுமை யிவ்வுலகில் திக்கிலா தவராய் விடுவதில்லை
              பின்னுமே யான்வரு வேனுமிடம் பேணியே யுங்களை விரும்பியுமே
              இன்னுமோர் கொஞ்சக் காலத்தில் என்னையே காண்பதில் லிவ்வுலகே
              என்னைநீர் காண்பீர் நீர்பிழைப்பீர் ஏனெனில் யான்பிழைக் கிறபடியால்.

133.       என்பிதா வினில்யா னிருப்பதையும் நலமிக எனில்நீ ரிருப்பதையும்
              இன்னுமு மிலேயா னிருப்பதையும் இனிதொடு மதுதின மறிந்துகொள்வீர்
              என்னட சிறந்தகற் பனைகளையே யெவனொரு வனுங்கைக் கொள்வனெனில்
              என்னையே யவன்பின் பற்றுபவன் எனதிட மன்புகூர்ந் திருப்பவனே.

134.       எனதுமே லன்புகூர் வோனெவனோ எனதுட அன்பினுக் குரியவனே
              எனதுட தந்தையி னன்பினுக்கும் இசைந்தவோர் பாத்திர னானவனே
              எனதுட அன்பவன் மேலிருக்கும் இருப்பே னேயவன் கூடவேயான்
              எனையுமே யவனுக் கன்பொடுமே யினிதொடுங் காட்டுவேன் என்றுரைத்தார்.

135.       இந்தவோர் கேள்வியே கேட்டனனே இடறா தோனாம் யூதாசே
              இந்தவு லகினுக் குமமையேநீர் வெளிப்படுத் தாதவோர் காரணமென்
              என்னகா ரணமோ வுமையெமக்கே வெளிப்படுத் துவதே யென்றனனே
              இன்னவி தமுரைத் தாரவனுக் கெதிர்மொழி யாகவே யேசுபரன்.