136. எனதிட மன்புகூர்ந் தாலொருவன் எனதுட வசனங் கைக்கொள்வான் எனதுட தந்தையு மவனிடமே யினிதொடு மன்புகூர் வாரருளாய் எனதொட தந்தைய ரொடுவருவேன் இருவரு மவனோடே வசிப்போம் எனதுமே லன்பிலா தவனெவனோ எனதுட வசனமே கைக்கொளானே. 137. வசனமே யுரைக்கச் செவிகொடுத்தீர் வசனமோ எனதுட சுயமலவே வசனமோ எனையிவ ணனுப்பியரா மெனதுட தந்தையர் வசனமேதான் வசனமா மிவைகளை யுரைத்துமக்கே வசித்திருக் கிறபொமு துமதொடுமே வசனமு ரைத்துமை யுணர்த்துவரே வருகிற தேற்றர வாளனுமே. 138. அவர்பரி சுத்தரா மாவியரே யவர்மெய்த் தேற்றர வாளனாவார் அவரைய னுப்புவர் தந்தையரே யனுப்புவா ரவரையென் னாமமதால் அவர்வரும் போதவ ரும்மிடமே யனைத்தையும் போதிப் பாருமக்கே அவர்நினைப் பூட்டுவார் நீரறிய உமக்கியான் சொல்லிய வாமனைத்தும். 139. விடுத்துமே செல்கிறே னுங்களுக்கே யிணையிலா எனதுட நிம்மதியே கொடுக்கிறேன் யானுமக் கிப்பொழுதே குணமுறு எனதுட நிம்மதியே கொடுக்கிற தேயிலை யானுமக்கே யுலகமே கொடுக்கிற பான்மையாய் நடுக்கமோ கலக்கமோ வேண்டியதில் இருமின் நலமுறு நிம்மதியே. 140. செல்கிறேன் பிதாவிட மேயெனவும் திரும்பியே வருகிறேன் பின்னெனவும் சொல்லவே கேட்டிருந் தீர்நலமாய் துயருற அவசிய மிலைநிசமே சொல்லுகி றேனினு முங்களுக்கே யிருமெனிற் றூயமெய் யன்புளராய் செல்கிறேன் பிதாவிட மென்றதனால் பெரிதுமே யடைவீர் சீர்மகிழ்வே. 141. என்னிலும் பெரியவர் தந்தையரே யெனையனுப் பினரே நிசநிசமாய் பின்னிது நடைபெறும் போதிவையே பெரியவிசு வாசமே கொளும்படிநீர் இந்நில மியம்புகி றேனுமக்கே யிவைகளி லெதும்நடை பெறுமுனமே இன்னுமே யிதனிலு மேயதிகம் இசைப்பதில் லிதுபொழு தும்மிடமே. |