பக்கம் எண் :

306

 

142.       அருட்பிதா விடமன் புளேனெனவும் அவருரைப் படிசெய் கிறேனெனவும்
              அறிந்துகொள் வதற்கென இதுவுலகம் அவைநடை பெறும்நிச மிதுவிதமே
              வருகிறா னுலகதி பதியேயாம் வாஎன திடமெது மவனுக்கிலை
              வருவீ ரெழுந்திருந் திவணிருந்தே நம்வழி செலுவோ மெனவுரைத்தார்.

156.(2) திராட்சைச் செடி, யோ. 15 : 1 - 8.

143.       மெய்யாந் திராட்சைச் செடியானே தோட்டக் காரரென் தந்தையர்
            
செய்யமுந் திரியா மதிலிணைந்தே சீர்கனி கொடுக்காக் கொடியெதுவும்
              மெய்யே நலமிலாக் கொடியிதையே வெட்டியே யெறிந்தே தள்ளுகிறார்
              வெய்யோன் கதிரதை யுலர்த்திவிடும் வெம்மை யக்கினி யாலெரிப்பார்.

144.       என்னில் நிலைத்துள கொடியெதுவோ இனியநற் கனியருள் கொடியதுவே
              என்னில் நிலைத்திருந் தெப்பொழுதும் இசனினு மதிகக் கனிகொடுக்க
              பின்னியே வளர்வீண் தளிர்களையே பெரிதாய்ப் பலனைக் கெடுக்காதே
              சின்னத் தளிரிற் களைந்தவற்றைச் சுத்தஞ் செய்கிறார் கொடியிகையை.

145.       இப்பொழு தேநீர் சுத்தமாயே யிருக்கிறீ ரேநிசம் யானுமக்கே
              செப்பிவந் துளவா மென்னுடைய திருவுப தேசமா முரையினாலே
              எப்பொழு துமேயிரு மெனில்நிலைத்தே யிருப்பே னேயுமில் நிலைத்தேயான்
              அப்படி யிருந்தாற் பாக்கியரே யதிகமே நற்கனி யீய்ந்தருள்வீர்.

146.       நானொரு திராட்சைச் செடிமெய்யாய் நலமுறு கொடிகள் நீவிரேதாம்
              நானுமே யெவனொரு மனுடனிலே நலமொடும் நிலைத்திருப் பேனெனிலே
              தானுமே நிலைத்திருந் தானெனிலும் தவறா தீய்குவன் நற்கனியே
              ஏனெனிற் றனித்தே யெனையலால்நீர் எதையுமே யியற்றக் கூடியதில்.

147.       எவனுமே யென்னினு மேயினைந்தும் என்னிலே நிலைத்துமே யிரானெனிலோ
              அவன்புறம் பேயிருப் பான்நிசமே யப்பா லெறிந்தவோர் கொடியேபோல்
              அவன்புறம் பேயெறி யப்படுவரன் அக்கொடி நிகருலர்ந் தேபோவான்
              அவைகளைச் சேர்த்துமே யக்கினியிற் போடுவா ரவையெரிந் தேயொழியும்

148.       நீங்களு மப்படி யென்னிலுமே யென்னுரை யினிலு மேநிலைத்தால்
              நீங்களே கேட்பதே யாதெனிலும் நிச்சய மேயுமக் காம்நிசமே
              நீங்களே மிகக்கனி கொடுப்பதினால் நேச பிதாமகி மைப்படுவார்
              நீங்களு மப்பொழு தென்னுடைய நேசமார் சீடரு மாகுவீரே.