பக்கம் எண் :

திரு அவதாரம்307

 

156.(3) அன்பு - பகை. யோ. 15 : 9 - 25
வேறு

149.       என்பிதாவே யென்னிலன்பு கூர்ந்ததேபோல் யானிருக்கி றேனுமிலே யன்புளோனாய்
              என்தனன்பில் நீவிருமே யவ்விதமாய் நின்றிருமின் என்றுமேத னித்திரதே
              என்பிதாவின் கற்பனைகள் கொண்டுமேயான் என்றுமவ ரன்பில்நிலை கொண்டதேபோல்
              என்னுடைய கற்பனைகள் கொள்ளுவீரேல் என்தனன்பில் நீவிரும்நி லைத்திருப்பீர்.

150.       என்னுடசந் தோடமுமே யுங்களிலே யென்றுமேநி லைத்ததே நீங்காதிருக்க
              பொன்றாதும் மின்மகிழ்வே யுங்களிலே பூரணம் டைந்துநிறை லாவதற்கும்
              என்னுடைய வாக்கிதையே யுங்களுக்கே யிப்பொழுதே சொல்லுகிறே னன்பொடுமே
              என்னுடைய மக்களேயி வற்றையெல்லாம் என்றுமற வாதுமக்குள் வத்திருமின்.

151.       அன்புகொண்டே னேயுமது மேலதேபோல் அன்புகொளு வீரொருவர் மேலொருவர்
              என்பதுவே யானுமக்குத் தந்தருளும் என்னுடைய மேன்மைமிகு கற்பனையாம்
              தன்சிநேகர்க் காய்த்தனது சீவனையே தானுமனப் பூர்வமாயே யீய்வதிலும்
              உன்னதமா மன்பெதுவு மிவ்வுலகில் உள்ளதுவோ மானுடர்க்குள் சொல்லுவீரே.

152.       உந்தமக்கே யானுரைக்கும் யாவையுமே யுண்மையொடு செய்துவரு வீரெனிலோ
              என்தனக்கே நேசராயி ருப்பீரென இன்பொடுமே சொல்லுகிறே னுங்களுக்கே
              என்தனுட ஊழியர்க ளென்றுமேயான் சொல்வதில்லை செப்பினேனென் சிநேகரென
              தன்னெசமான் செய்வதெது மூழியனோ சற்றெனும றிந்துகொளான் நிச்சயமே.