153. என்தனுட தந்தைசொலக் கேட்டதெல்லாம் இன்பொடறி வித்தேனே யுங்களுக்கே என்தனேசர் என்றிசைப்பே னாதலினால் என்தனுட ஊழியரெனச் சொல்வதில்லை என்தனையோ நீர்தெரிந்து கொண்டதில்லை யென்றறிந்து கொள்ளுவீரே நிச்சயமாய் என்தனாலே யானதன்றோ யானுமையே யென்தனுக்கென் றேதெரிந்துகொண் டுளேனே. 154. என்னுடநோக் கம்புவியி லுங்களையே யேற்படுத்திக் கொள்ளுதற்கோ யாதெனிலே என்னுடநா மம்மதில்நீர் தந்தையிடம் ஏதெனிலு மாவலொடே கேட்பதுவோ என்னுடைய தந்தைமன மேயுவந்தே யீய்ந்தருள உங்களுக்கே யன்புடனே உன்னியேநீர் போய்க்கனிகொ டுப்பதற்கும் உங்களுக்கும் யென்றுமேமன மில்லையே. 155. உமக்கிவையே யாவுமேபோ திப்பதற்கே யுள்ளதொரு நோக்கமுமே யாதெனிலோ உமக்குளேநீர் நிட்களெங்க மாயொருவர் மேலொருவ ரன்புகூர வேண்டுமென்றே உமதுபேரி லன்புளதோ இவ்வுலகே யும்மைவிரோ சித்துமேதுன் பஞ்செயுமே உமதுடஅன் பில்நிலைத்தே நீவரிரும் உம்மைவிரோ தித்துலகே தும்புசெய்தும். 156. அருளிலாத இவ்வுலகே சீறியெழுந் தந்தமாயே யுங்களைப்ப கைத்ததெனில் அறிந்துகொளு முங்களைப்ப கைப்பதின்முன் னருணிறைந்த என்னையும்ப கைத்ததென அருளிலாத தாலிருண்ட பாரிதில்நீர் அருளிலுல கத்தவரா யேயிருந்தால் அருளிலாத இப்புவிக்கே நீருரியர் உலகிதுவோ தன்னதநே சித்திருக்கும். 157. உலகிதுவோ உங்களைப்ப கைக்கிறதே யுலகினராய் நீவிரிரா தானதினால் உலகிதுவே யென்னையும்ப கைக்கிறதே யெதற்கெனிலோ யானுலகத் தானலவே உலகுமைப்ப கைக்கிறதே யேனெனிலோ உலகினின்றே யானுமைத்தெ ரிந்ததினால் உலகுமைப்ப கைக்குமேமெய் யெப்பொழுதும் உலகினின்றே நீர்பிரிந்தோ ரானதினால் |