158. என்னுரையை யும்முளத்தில் வைத்திருமின் ஆண்டவனி லூழியனு யர்ந்தவனோ என்னையுமே யிம்சைசெய் தாரெனிலோ இம்சைசெய் வாருமையு மென்றனரே என்னுரைகைக் கொண்டிருந்தா ரேயெனிலோ உம்முரையு மின்பொடுமே கைக்கொளுவார் என்னுடநா மம்நிமித்தம் செய்வாரிவை தாமறியா ரேயெனைய னுப்பினோரை. 159. அவரிடமே வந்துமேயான் பேசியதால் அவர்பவம்வெ ளிப்படவே யாயினதே அவரிடமே வந்தியான்பே சாதிருந்தால் அவர்களுக்குப் பாவமேயி ருந்திராதே அவர்களிப்போ போக்குரைக்க இல்லையிடம் அவருடபா வங்களைக்கு றித்துமேதான் எவனொருவன் என்னையேப கைக்கிறானோ அவன்பகைக்கின் றானெனது தாதையை. 160. இவர்களுக்குள் யான்செய்யா திருந்திடிலோ வேறெவனுஞ் செய்திராக்கி ரீயைகளை இவர்களுக்குப் பாவமேயி ராதுநிசம் என்றுமக்குச் சொல்லுகிறேன் நிச்சயமே இவர்களிப்போ என்தனையே கண்டதினா லென்தனின்பி தாவையுமே கண்டனரே இவர்களெனைக் கண்டுமேப கைத்தனரே யென்யிதாவைக் கண்டுமேப கைத்தனரே 161. காரணமில் லாதிருந்து மென்தனையே காய்மகார மாய்ப்பகைத்தா ரேயெனவே ஆரணமா மன்னோரின் வேதத்திற் றானமைந்த வாக்குநிறை வேறவுமே ஆரணமா அவர்களிட மேயிருந்தும் அப்படிந டக்கமன மற்றவராம் பாரகரும் பரிசயரு மாம்பெரியோர் காய்ந்துபகைத் திவ்விதஞ்செய் தாரவர்க்கே. 156.(4) தேற்றரவாளன். யோ. 15 : 26 - 16. 162. தந்தையிடம் நின்றுமக்கே யானுவந்த னுப்புமொரு சத்யதிரு ஆவியானோர் தந்தையிடம் நின்றுமேபு றப்படுவோர் சம்பூரண தேற்றரவ ளிப்பவரே வந்துசேரும் போதவரென் னைக்குறித்தே மாட்சிமிகு சாட்சியேகொ டுப்பரேமெய் எந்தனோடி ருந்ததினா லாதிமுதல் நீவிருமென் சாட்சிகளே யாயிருப்பீர். |