163. சொன்னேளே யிவையாவு முங்களுக்கே நீரிடறிச் சோர்ந்துமேபோ காதிருக்க அன்னவரே யுங்களைச்செ பாலயத்துக் கப்புறப்ப டுத்துவர்பு றம்பாக்கி பின்னுமேயான் சொல்லுகிறேன் யாதொருவன் உம்மையேபி டித்துக்கொலை செய்கயிலே மன்னுமகா தெய்வத்துக் கேற்றதொண்டே செய்கிறேனென் றெண்ணுமொரு காலம்வரும் 164. அறிந்திலாரே தந்தையையு மென்னையுமே யாதலினாற் செய்குவாரு மக்கிவையே அறிந்திருமு மக்கிவையே சொல்லுகிறேன் ஏனெனிலக் காலமிவை நேரிடுங்கால் தெரிவதற்காய் முன்னுரைத்தே னென்றுமேநீ ரேதெளிந்து ணர்ந்திவைநி னைக்கவுமே அறிவிக்க வில்லையுமக் காதியிலே ஆதிமுதல் யானிருந்த தாலுமோடே 165. செல்லுகிறே னிப்பொழுதோ இங்கிருந்தே யென்னையிங்க னுப்பினோரி டந்திரும்பி செல்லுகிறீ ரெங்கெனவே கேட்கவில்லை சீலமொடே யுங்களிலே யாவனுமே சொல்லுவதி னாலிவற்றை யுங்களுக்கே சோர்ந்துமனந் துக்கமடைந் தீருமக்குள் சொல்லுகிறேன் யானுமக்கே யுண்மையை சொல்கிறேன்யான் சொல்லுவதும் நன்மையே. 166. நான்செலாதி ருப்பேனெனி லிங்குவரார் நன்குறவே தேற்றுபவ ரும்மிடமே நான்பிரிந்தே சென்றாலோ உம்மிடமே நன்றுறவ னுப்புவேனே யாவியரை காண்பீர வர்வருவார் இவ்விலகைத் தாங்கடிந்து ணர்த்துவாரே திண்ணமேதான் காண்பீரே நீதிநடுத் தீர்ப்பையே தாங்கடிந்து ணர்த்துவதை நேராயே. 167. உணர்த்துவரே பாவத்தை யேகுறித்தே யுண்மையாய் நம்பாததி னாலென்னை உணர்த்துவரே நீதியையு மேகுறித்தே யும்விழியா லென்னைநீர் காணாதபடி கணந்துதிக்குந் தெய்வமாமென் தந்தையிடம் யான்கடிதிலே யெழுந்தே சேர்வதினால் உணர்த்துவரே நீதியாயத் தீர்வையே யிவ்வுலகி னாதிபன்தீர்ப் பேபெற்றதால். |