168. உங்களுக்கே யின்னும்பல காரியங்கள் யானுரைக்க வேண்டியது மேயவத்யம் உங்களாலே தாங்கமுடி யாதிதுவோ உம்மிடம்வ ருஞ்சத்ய ஆவியானோர் உங்களையே சர்வசத்தி யத்துளுமே யுண்மையாய் நடத்துவாரே நலமாயே உங்களுக்கு ரைப்பாரே யாயினுமே ஒன்றுமேயு ரைப்பதில்லை தஞ்சுயமாய். 169. அறிவிப்பார் தாங்கேட்ட யாவையுமே யேதுமதி லேதவறா தேசொலுவார் அறிவிப்பா ருங்களுக்கே யீதெலாமே யின்னுமறி விப்பர்வருங் காரியங்கள் அறிவிப்பா ரென்னதிலி ருந்தெடுத்தே யானதாற்செய் வார்மகிமை யென்ளைத்தான் அறிவிப்பா ரெனதிலிருந் தென்றுரைத்தேன் தந்தையரின் யாவுமன தானதினால் 156.(5) சீடரைப் பிரிதல். 170. சிறிதுகாலம் பின்பெனைநீர் காண்பதில்லை செப்புகிறேன் தந்தையிடஞ் செல்வதால்யான் சிறிதுகால மேயதன்பின் மாறியென்னைக் காண்பீரே செப்புகிறேன் என்றனரே சிறிதுகாலம் பின்பெனைநீர் காண்பதில்லை பின்சிறிது காலமேகாண் பீறென்றனர் சிறிதுகால மென்றதனா லர்த்தமெதோ யாதுமேதெ ளிவில்லையென் றார்சிசியர். 171. அறிந்தனர வர்மனதை யேசுபரன் அதுகுறித்தே தம்மிடத்திற் கேட்பதற்காய் சிறிதுகாலம் பின்பினைநீர் காண்பதில்லை பின்சிறிதே காலத்திற காண்பீரென தெரிவிக்க யானதையே யுங்களுக்குள் தெரியவேவி சாரணையெ செய்கிறீரோ தெரிவிக்கின் றேனுமக்கே மெய்மெயாயே திட்டமாய்ந டக்குமதே மெய்மெயாயே. |